பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TLLLLLL L LLLLL LL TLLLLS CCCL LLLLLLLLLTCLLLLSK LLLLLSS00S

இப்போது பாரதி ஒரு சாதாரணமான புலவர், பத்திரிகையாளர், சிறந்த ஒரு எழுத்தாளர், ஒரு நேர்மையான அரசியல் ஞானி, ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர், ஒரு கவிஞன், பாரத நாட்டின் பேருருவத்தைத் தனது கவிதைகளின் மூலம் எடுத்துக் காட்டும் ஒரு மகா கவிஞன் என்ற நிலையிலிருந்து ஒரு உயர்ந்த தத்துவ ஞானியாக, மகா ஞானியாகக் காட்சியளிக்கிறார். அவர் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லிலும் உயர்ந்த பொருள் நிறைந்த அருள்வாக்கு நிறைந்திருக்கிறது. இந்த மாபெரும் தத்துவ ஞானியின் ஒவ்வொரு சொல்லும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. ‘தெய்வத்தை நம்பு, உண்மையே பேசு, நியாயத்தைச் செய், எல்லா இன்பங்களையும் பெறுவாய்” என்றல்லவா கூறுகிறார்.

ஆங்கிலேயர்களின் கொடுங்கோலாட்சி பாரதத்தைக் கவ்விப் பிடித்திருக்கிறது,. எட்டியின் விஷமென அது நமது நாடு முழுவதும் பரவி நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் மட்டுமல்ல இந்த பூமண்டலத்தின் பல நாடுகளிலும் பரவியிருக்கிறது. விடுதலைப் பேரியக்கத்தின் உரத்த குரல் உலகெங்கும் கேட்க வேண்டும் என்று பாரதி சிந்திக்கிறார். எனவே தெய்வ பக்தி மிகுந்த ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் நியாயத்தை பயமில்லாமல் செய்து மேன்மை பெற்று, மற்ற தேசத்தாரையும் கை துக்கி விட்டாலொழிய இந்த பூமண்டலத்திற்கு நன்மை ஏற்படாது என்று கூறுகிறார்.

மேலும் ஆங்கிலேயர்கள் தங்கள் உலக ஆதிக்கத்தைக் கையில் வைத்துக் கொண்டு அவர்களுடைய பணபலம், வியாபார பலம், பத்திரிகைப் பிரச்சார பலம், வானொலிப் பிரச்சார பலம், ஆட்சி பலம் ஆகியவைகளை வைத்துக் கொண்டு தங்களைப் பெரிய மனிதர்களென உலகிற்குக் காட்டிக் கொண்டு, தங்கள் கொடுங்கோன்மையை மறைத்துக் கொள்கிறார்கள். எனவே