பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. Јтвѣвш சாஸ்திரி கதை 134

நானும் தமிழ் நாட்டு உடையில் சென்றிருந்ததால் ஹோட்டலில் இருந்த அனைவரும் எனக்குப் பெரிய மரியாதை செலுத்துவதற்கான கதை தெரிந்து விட்டது. இவ்வாறு இந்திய உடைக்கே கூட இந்திய நர்ட்டிலேயே அங்கீகாரம் தேவைப்பட்டது.

காளிதாஸரிடம் (பாரதியிடம்) பேசிக் கொண்டிருந்த ராகவ சாஸ்திரியிடம் ராமராயர்," முதலில் இந்த ஐரோப்பிய உடுப்பை மாற்றி இந்துக்களைப் போல உடுப்பு போட்டுக் கொள்ளும். அதுவே ஆரம்ப திருத்தம்.

கெல்கத்தாவில் அமிர்த பஜார் பத்திரிகையின் ஆசிரியராகிய றுரீமான் மோதிலால் கோஷ் அங்கே கவர்னராக இருந்த லார்டு கார் மைக்கேல் என்பவரைப் பார்க்கப் போயிருந்தாராம். உஷ்ண காலத்தில் சீமை உடுப்பைப் போட்டுக் கொண்டு லார்டு கார் மைக்கேல் வியர்த்துக் கொட்டுகிற ஸ்திதியில் இருந்தாராம். அப்போது மோதிலால் கோஷ் கவர்னரை நோக்கி இந்தியாவில் இருக்கும் வரை எங்களைப் போல் உடுப்பு போட்டுக் கொண்டால் இத்தனை கஷ்டமி ராது என்று சொன்னாராம். அதற்கு லார்டு கார் மைக்கேல், “நீர் சொல்வது சரிதான். எங்களுடைய மூடத்தனத்தாலே அவ்வாறு செய்யாமல் இருக்கிறோம்” என்று மறுமொழி சொன்னாராம். அப்படியிருக்க நம்மவர் நம் தேசத்தில் சீமையுடுப்பு மாட்டுவது எவ்வளவு மூடத்தனம், பார்த்தீரா” என்று சொன்னார்.

"இனிமேல் சுதேசி உடுப்பு போட்டுக் கொள்கிறேன்” என்று ராகவ சாஸ்திரி சமஸ்கிருத பாஷையில், சொல்லி விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார்.

பாரதியின் இந்த வார்த்தைகளை கவனிக்கவும். உடுப்புகள் கூட சதேசியத்தைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியத்தை பாரதி சுட்டிக் காட்டுகிறார். இன்றும் அந்தப் பிரச்னை நீடிக்கிறது.