பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTyLL LLLLLL LLy TTy MT TTTLTyiSK SLyS 000

நமது நாட்டின் இளைஞர்களின் மாணவ மாணவிகளின் உடற் பயிற்சியிலும், விளையாட்டுப் பயிற்சிகளிலும் எந்த அளவுக்கு கவனம் செலுத்தி வருகிறோம்? நூறு கோடி மக்களைக் கொண்ட இந்த மாபெரும் பாரத நாடு உலக விளையாட்டுப் போட்டிகளில் இத்தனை தோல்விகள் அடையக் காரணம் என்ன?

நமது நாட்டுப் பற்றும், தெய்வ பக்தியும் எந்த அளவிற்கு அபிவிருத்தியடைந்திருக்கிறது? நமது நாட்டு சுதந்திரம் பற்றிய உணர்வு நிலையின் அளவில் நமது தேச முன்னேற்றம் பற்றிய சமுதாய உணர்வு நிலை உயர்ந்திருக்கிறதா? நமது ஆலயங்களும் அவைகளின் நிர்வாகங்களும் எந்த அளவில் சீரமைக்கப் பட்டு புனரமைக்கப்பட்டு செயல் படுகின்றன? பூஜைகளும், விழாக்களும் எந்த அளவுக்கு சிறப்பாக நடைபெறுகின்றன? ==

என்றும் இன்னும் பல கேள்விகளுக்கும் நாம் விடை காண வேண்டும். அவை பற்றி விவாதிக்கவும் வேண்டியதிருக்கிறது. நமது ஜனத்தலைவர்கள் இவைகளில் கவனம் செலுத்த வேண்டுமல்லவா? நாம் பெற்றுள்ள சுதந்திரத்தைப் பேணிக் காப்பதற்கு நமது உள்பலம் வலுவடைய வேண்டாமா?

xx xx xx