பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல் Leppio sgpënuës(pšgjësoir-et *sofores 155

என்று பொருள். விடத்தக்கது விடு என்று சிலர் பிற்காலத்தில் கூறிய உரை ஒப்பந்தக்கதன்று” என்று பாரதி குறிப்பிடுகிறார். குழந்தை தனது முதல் கல்வியை ஒழுக்கத்தை வீட்டில் பெறுகிறது. குழந்தைக்குத் தாயே முதலாவது ஆசிரியையாக இருக்கிறார். தாயே முதலாவது குரு. எனவே தாய்மார்களை குரு ஸ்தானத்திற்கு உயர்த்த வேண்டும்.

தேசியக் கல்வி என்னும் தலைப்பில் பாரதி எழுதியுள்ள உரைநடைப் பகுதியில் வந்துள்ள அரசியல் கருத்துக்களை இங்கே முதலில் காணலாம்.

“தேசியக் கல்வி குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம் மேற்படி (ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கூறப்படும்) விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை. ஏனென்றால் தேசமாவது குடும்பங்களின் தொகுதியான முன்னரே காட்டியுள்ளோம். குடும்பங்கள் இல்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லா விடிலோ தேசியக் கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை” என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

குடும்ப அமைப்பு என்பது பாரத நாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். குடும்ப அமைப்பு பற்றி நமது நாட்டின் அறநூல்களும் நமது முன்னோர்களும் முனிவர்களும் சிறந்த பல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்.

குடும்பம் என்பது சமுதாயத்தின் அடிப்படை தேசத்தின் அங்கம், அஸ்திவாரம். அணுக்கூறு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்கள் (பயனிடுகள்) நான்கிலும் குடும்பம் இணைந்திருக்கிறது.

அறத்தில் இல்லறம் முக்கியமான பகுதியாகும். இல்லறத்தின் தலைவி, வழிகாட்டி பெண்-மனைவி, மனைவியை