பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில்-அரசியல் oppub zgoguë#Opš###er-se: சீனிவாசன் 157

ஈடுபடுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு மக்களிடையே மரியாதையும் செல்வாக்கும் வளர்ந்தது. இல்வாழ்க்கையில் இருந்தவர்கள் அவர்களை போஷித்தார்கள். அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் இந்தத் துறவறமும் துறவிகளும் சமுதாயத்தில் அளவுக்கு அதிகமாகச் சென்ற பொழுது இந்த சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், புத்தத்திற்கும் சமணத்திற்கும் எதிராகக் கருத்துப் போராட்டங்கள் நடந்த போது வேத வழியில் சங்கர மடங்களும், சைவ, வைணவ மடங்களும் தோன்றி பலர் துறவறம் பூண்டு தங்கள் சமயப் பணிகளில் சமூகப் பணிகளில் ஈடுபட்டார்கள். அப்போது வேதவழி பாடுகளிலும், வேதாந்த சமயங்களைப் பரப்புவதிலும் துறவிகள் இந்திய சமுதாயத்தில் இடம் பெற்றனர். துறவு என்பது தங்களை சமயப் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதாகும். அது தியாக வாழ்க்கையாகும். அதை ஹிந்து தர்மம் பிற்காலத்தில் அங்கீகரித்திருக்கிறது. இருப்பினும் துறவு என்பது புத்தமும் சமணமும் தோற்றுவித்த தர்மமாகும்:உலகிற்கே இதுவே முன்னுதாரணமானதாகும்.

குடும்பம் என்பது அறத்தின் ஒரு வடிவம். அது சமுதாய ஒழுக்கத்தின் தனி மனித ஒழுக்கத்தின் அடிப்படை. ஒருத்திக்கு ஒருவன் என்றும் பின்னர் ஒருவனுக்கு ஒருத்தி என்றும் நமது முன்னோர்கள் குடும்பத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளார்கள். கற்பு என்னும் உயரிய சொல்லை பாரதம் உருவாக்கியிருக்கிறது. கற்பு என்பது தூய்மையின் வடிவம் மட்டுமல்ல. அது கற்றுத் தேர்ந்த அறிவு வளர்ச்சியின் முமு வடிவம். அதனால் கற்பு என்பதை இரு பாலருக்கும் பொதுவாக வைப்போம் என்று பாரதி கூறுகிறார். சிறந்த இல்லறம், சிறந்த ஒழுக்கத்தின் சிறந்த கற்பின் கற்றறிந்த அறிவு நிலையின் உறைவிடமாக விளங்குகிறது. ஒழுக்கமும் அறிவும் நிறைந்த குடும்பங்கள் அமையுமானால், ஒழுக்கமும் அறிவும் நிறைந்த