பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21._தேசியக்_கல்வி 152

அத்துடன் நமது கல்வி நிலையங்களின் கட்டிடங்கள், இந்தியக் கட்டடக் கலையில் கட்டப்பட வேண்டும். கல்வித் துறையில் கொள்கை முடிவுகள் எடுப்பத்தில் ஆசிரியர் பணிகளில் பெண்களையும் கலந்து கொள்ளும் படியாக அமைய வேண்டும் என்பது பாரதியின் தெளிவான கருத்தாகும்.

நாடு விடுதலை பெறுவதற்கும் விடுதலை பெற்ற பின்னர் நாடு வளர்ச்சி அடைவதற்கும் மேம்பாடு அடைவதற்கும் தேசியக் கல்வி மிகவும் அவசியம் என்பது பாரதியின் தெளிவான கருத்தாகும்.

“எது எப்படியானாலும் இந்த தினத்தில் இந்த கூடிணத்தில் நாமெல்லாரும் பறையர் பார்ப்பார் எல்லோரும் ராஜாங்க விஷயத்தில் ஒரே ஜாதி. இப்போது எங்களுக்கு அதிகாரிகள் தயவு செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மகாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு செலவு உள்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மகாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றப்படி ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டும் என்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் விண்ணப்பம் செய்கிறோம். விடுதலை விண்ணப்பத்துக்கு நல்ல உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று பாரதியார் குறிப்பிடுகிறார். “அன்றைய விடுதலை இயக்கத்தின் ஜனத்தலைவர்களின் உணர்வு நிலையைப் பாரதியார் இக்கட்டுரையில் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.

தேசியக் கல்வி, மனுஷ்ய ஜாதியின் விடுதலை, இவ்விரண்டு பெருங்காரியங்களைத் தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக்கிறது. இவற்றுள் மனுஷ்ய ஜாதியின்