பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTyS LyMT L TCCy CCCL LLLLLLLLTTTiSK SLLLLLS SL00

பாசிஸத்திற்கெதிராக உலக நாடுகள் அனைத்தும் திரண்டன. அந்த உலக மகாயுத்தத்தில் யுத்த களங்களில் மட்டும் ஆறு கோடிக்கு மேல் உயிர் மடிந்தனர். எராளமான பொருள் நஷ்டமும் ஏற்பட்டது. போர் நடந்த நாடுகளில் மக்கள் சொல்லொணாத துன்ப துயரங்கள் அடைந்தனர்.

1945-ம் ஆண்டில் பாஸிஸம் தோல்வியடைந்து போர் முடிந்தது. உலகின் பல நாடுகளிலும் சுதந்திரத்திற்கான பெருங் கிளர்ச்சி வெடித்தது. ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் பல லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் விடுதலைக் கிளர்ச்சியில் திரண்டனர். ஆசியாவில் இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, இலங்கை, பர்மா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா முதலிய பல நாடுகளில் விடுதலைக் கிளர்ச்சி உச்சத்தை எட்டியது.

1946-ம் ஆண்டில் இந்தியாவில் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் திரண்டனர். 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றது. இன்று உலக நாடுகள் அனைத்தும் விடுதலை பெற்று விட்டன.

xx xx xx