பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. UGËġlu umieosu 202

பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார். அவருக்கு இவ்விடத்து பாஷைகள் தெரியாது. சங்கதி தெரியாமல் விரிக்கிறார். சாஸ்திர பரிபாஷை நமது பாஷைகளில் மிகவும் எளிதாகச் சேர்த்து விடலாம். மேலும் இயற்கை நடையிலே இங்கிலிஷ் பாஷையைக் காட்டிலும் தமிழ் அதிக நேர்மையுடையது. ஆதலால் சாஸ்திரப் பிரவசனத்துக்கு மிகுந்த சீருடையது. இந்தச் சங்கதி நம்மவர்களிலே கூடச் சில இங்கிலிஷ் பண்டிதருக்குத் தெரியாது ஆதலால் மிஸ்டர் ரோலோவை

நாம் குற்றம் சொல்வது பயனில்லை.

நமது பூர்வீகர் சயன்ஸ் தேர்ச்சியில் நிகரில்லாது விளங்கினார்கள். அந்தக் காலத்து லெளகீக சாஸ்திரம் நமக்குத் தெரிந்த மாதிரி வேறு யாருக்கும் தெரியாது. இந்தக் காலத்துச் சங்கதிதான் கொஞ்சம் இழுப்பு” என்று பாரதி எழுதுகிறார். தமிழ் மொழியிலேயே எல்லா அறிவியல் கல்விகளையும் கற்க வேண்டும். கற்பிக்க வேண்டும் என்பது பாரதியாளின் கொள்கை. அதை நாம் இன்னும் நிறைவேற்றவில்லை. உயர் கல்வியில் எல்லாம் இன்னும் . ஆங்கிலத்திலேயே தான் கற்கிறோம் கற்பிக்கப் படுகிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

பாடப் புத்தகம் இல்லையென்று சில பண்டிதர்கள் கூறி வருகிறார்கள். தேவைப் பட்ட பாடப் புத்தகங்கள் நமது வல்லுனர்களைக் கொண்டு எழுதுவிக்கலாம். இதர பல மொழிகளிலிருந்து தமிழில் மொழியில் பெயர்த்தும் கொள்ளலாம்.

உடம்பு - உடல் வலிமை

உடம்பு என்னும் தலைப்பில் பாரதி எழுதுகிறார். உடம்பு நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதின் வசமாகும். ஆகையால் உடம்பிலுள்ள நோய்களைத் தீர்த்து வலிமை பெறுவதற்கு மன உறுதி,