பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில்-அரசியல்_மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-அடசினிவாசன்ட225

இவ்வாறு மேலான வீரப்பயிற்சி இருந்த நாடு இப்போது என்ன நிலைமைக்கு வந்திருக்கிறது என்று நாட்டின் இன்றைய அடிமை நிலை பற்றி பாரதி மனம் வெதும்பி எழுதுகிறார் ஆயினும்,

“ஆயினும் நமக்கு ஒரு ஆறுதல் இருக்கிறது. அதுவும் வீணான ஆறுதலன்று. உண்மை பற்றிய ஆறுதல் என்று எழுதுகிறார்.

“இந்த ஆறுதல் யாதெனில் நமது ஜாதியை இடையே பற்றிய சிறுமை நோய் விரைவிலே நீங்கி விடும் என்பதற்கு ஆயிரக்கணக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பரிசுத்தமான நெஞ்சமும், தெய்வ பக்தியும் தன்னல மறுப்பும் உடைய பலமேலோர்களை இப்போது நாட்டிலே காண்கிறோம். இது வீணாக மாட்டாது. நம்மைப் பற்றியிருந்த புண்ணோய் சீக்கிரத்திலே மாறிப் போய்விடும். வானத்திலே துந்துயியொலி அதிரக் கேட்கின்றோம். மகாபாரதம் (Great India) பிறந்து விட்டது. வந்தே மாதரம்” என்று எழுதி முடிக்கிறார்.

“பொழுது புலாந்தது யாம் செய்த தவத்தால் புன்மையிருட் கனம் போயின. யாவும் எழு பசும் பொற் சுடர் எங்கனும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி.”

என்பது பாரதியின் அற்புதமான கவிதை.

பாரதி இதைக் கூறிய முப்பதாண்டுகளுக்குள் பாரதம் சுதந்திரம் பெற்று விட்டது. மகாபாரதமாக உலகில் புகழ் பரப்பி முன்னேறி வருகிறது. வையத் தலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது.

உலகமெல்லாம் சக்தி மயம். பஞ்ச பூதங்கள் சூரிய சந்திரர்கள் சுடர்கள் அனைத்தும் சக்திமயம். நம்மைச் சூழ்ந்துள்ள காற்று, தண்ணி, நெருப்பு, அனைத்தும் சக்திமயம், பூமியின் வளம், நீராவி,