பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-அடசினிவாசன்ட229

தொழில்கள் எல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும்.

பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும், புகழும், நிறைந்திருத்தல், நல்ல மக்களைப் பெறுதல், இனப் பெருமை

உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளையாகும்.

இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது. பெண் பாட்டு, கூத்து, முதலிய ரஸ் வஸ்துக்களை அனுபவிப்பது இவ்வின்பங்கள் எல்லாம், தமிழா, உனக்கு நன்றாக அமையும் படி பராசக்தி அருள் புரிக உன்னுடைய நோய்கள் எல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. உனக்கு இனிமையும் அழகும் உடைய வஸ்துக்களெல்லாம் வசப்படுக. பஞ்சபூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்பொழுதும் இன்பம் எய்துக.

வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். மேல் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேரிய பெரியாருக்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை அருள் செய்வான். தமிழா, உனது புருஷார்த்தங்கள் கை கூடுக என்று பாரதி தனது உரைநடையில் குறிப்பிடுகிறார்.

பாரதியின் கவிதைகளைப் போலவே அவருடைய உரைநடையிலும் மிகவும் சிறப்பான உயிர்த் துடிப்பான அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய கவிதைகளைப் போலவே உரைக் கட்டுரைகளும் மக்களிடம் விரிவாகச் செல்ல வேண்டும். அவை இதர இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு பாரத மக்கள் அனைவரும் அறியும் படி செய்ய வேண்டும். பாரதி வாழ்க, தமிழ் வாழ்க, வளர்க வந்தே மாதரம்.

xx xx xx