பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TT L LLL TT LL LLLLL LLCCLL LLLLLLsTAAA LLLSAAAAAAS LLLLLLS 00

பயிற்சி, ஆடல்பாடல் பயிற்சி நிகழ்ச்சி, உடல் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி மற்றுமுள்ள பல செயல்பாடுகளிலும், மக்கள் நேரடியாக சுய முயற்சிகளில் பங்கு கொள்ள வேண்டும். இது சாத்தியம். இவைகள் மூலம் அரசின் பாதி வேலை குறையும். அரசை வெறும் விமர்சனம் செய்வதும் குறைகூறுவதும் மட்டுமே நமது வேலையாக இருக்க முடியாது. மக்களை விரிவாகப் பல பணிகளிலும் தொண்டுகளிலும் பங்கு கொள்ளச் செய்வதே பொது அமைப்புகளின் பணியாக இருக்க வேண்டும்.

நமது குடும்ப அமைப்பில் நமது வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் வீடு சுத்தம், தண்ணி, சமையல், உணவு, குழந்தை வளர்த்தல், பராமரித்தல், படிப்பு, ஒழுக்கம், முதியோர் பராமரிப்பு முதலிய பல பணிகளையும், வேறுபாடுகள் இன்றி குடும்பத்திலுள்ள அனைவரும் சேர்ந்தே செய்கிறோம். அதுபோல, தெருக்களில், ஊர்களில், நகரங்களில், மற்றும் ஊர் ஒன்றியம் மாவட்ட பஞ்சாயத்துகள், வரையிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும், அரசுகள் அளவிலும், அந்தந்த அரசுகளின் கீழ் உள்ள பலவேறு இலாக்காக்களிலும், குழுக்களிலும், துணைக் குழுக்களிலும், அவைகள் மூலம் நிறைவேற்ற வேண்டிய பலபணிகளிலும், பலவேறு துறைகளில் உள்ள மக்கள், வல்லுனர்கள், நிபுணர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், ஆர்வலர்கள், முதலியோர் பங்கு கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு சகல பகுதி மக்களின் திறமைகளையும் அனுபவங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பாரதியின் சிந்தனையும் கருத்துமாகும். இவ்வாறு நாட்டுப் பணிகளிலும் பொதுப்பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் விரிவாக மக்கள் பகுதியினர்கள் பங்கு கொள்வதன் மூலம் மக்களாட்சி முறை விரிவடையும்.

பாரதி தனது கட்டுரைகளில் இந்து தர்மத்தின் மேன்மை,