பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LITTÉuscar e cowbo-ideo svémuso leppe egegnu##9ż&#==== #efer*=-33

1. பாரதியின் உரைநடை

பாரதியின் கவிதைகளைப் போலவே, அவருடைய உரைநடைக் கட்டுரைகளிலும், அரசியல், பொருளாதார, சமூக சீர்திருத்தக் கருத்துக்களும், ஆன்மீகக் கருத்துக்களும் நிறைந்திருப்பதைக் காண முடிகிறது. தேசபக்தியும் தெய்வ பக்தியும் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. மகாகவி எழுதியுள்ள கவிதைகளோ, கட்டுரைகளோ, கதைகளோ, தத்துவ விளக்கமோ எதை எடுத்தாலும், தேசிய விடுதலை, தேச முன்னேற்றம், சமுதாய சீர்த்திருத்தம், பாரதப் பண்பாடு ஆகியவை பற்றிய கருத்துக்கள் முக்கிய இடம் பெற்றிருக்கின்றன.

பாரதியின் கவிதைகளில் தெய்வ பக்திக் கவிதைகளோ, தேச பக்திக் கவிதைகளோ, கண்ணன் பாட்டோ, பாஞ்சாலி சபதக் காவியமோ, வேதாந்தப் பாடல்களோ ஆகிய எதை எடுத்துக் கொண்டாலும், அந்தக் கவிதைகளில் நாட்டின் விடுதலை, பொருளாதார சமுதாய முன்னேற்றம், கல்வி, வளர்ச்சி, சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பெண்கள் விடுதலை, சாதிக் கொடுமைகளை ஒழித்தல் முதலிய கருத்துக்களை அழுத்தமாகவே குறிப்பிட்டு -ள்ளதைக் காண்கிறோம். பாரதியின் உள்ளுணர்வாக தேச விடுதலையும் சமுதாய விடுதலையும் இருந்ததே அதற்குக் காரணமாகும். தேசபக்தியே. அவருடைய உயித் துடிப்பாக அவருடைய படைப்புகளில் இருக்கிறது என்பதைக் காண்கிறோம்.

விநாயகர் நான் மணி மாலைப் பாடலில், “அச்சம் தீரும், அமுதம் விளையும், வித்தை வளரும், வேள்வியோங்கும், அமரத் தன்மையு மெய்தவும் இங்கு நாம் பெறலாம்” என்றும், “கடமையாவன, தன்னைக் கட்டுதல், பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்”, என்றும், “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்” என்றும், “நாட்டினைத்துயரின்றி நன்கமைத்திடுவதும்” என்றும், "மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,