பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2- ды, зат» атайт, эколо,55% 36

அதைக் கண்டு ஆங்கிலேய அரசாங்கத்தார் அச்சம் கொண்டனர். அவர்களுடைய அடக்குமுறை அம்புகள் அவர் மீது அடிக்கடி பாய்ந்தன. பாய்ந்து கொண்டே இருந்தன. அவைகளுக்கிடையில் பாரதி சில நேரங்களில் பக்கவாட்டில் இருந்தும் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டியதிருந்தது.

பாரதியாருடைய காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம். முதலிரண்டு பத்தாண்டுகள். இந்திய விடுதலை இயக்கம் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த காலம். இந்திய தேசிய காங்கிரஸில் அதிகார பூர்வமாக பரிபூரண சுதந்திரம் வேண்டுமென்ற கோரிக்கையும் தீர்மான வடிவில் கூட இல்லாத காலம். ஆயினும் லோகமான்ய பாலகங்காதரத் திலகர் தலைமையில் தீவிர வாதப் பிரிவு வலுவாக வளர்ந்து கொண்டிருந்தது. “சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை” என்னும் கருத்து வளர்ந்து கொண்டிருந்த காலம். அத்துடன் பலவேறு தீவிரவாதக் குழுக்களும் பலவகையான ஆயுதப் போராட்டங்களுக்கும் கூட திட்டமிட்டுக் கொண்டிருந்த காலம். இவ்வாறு தேசிய இயக்கத்தில் மிதவாதமும் தீவிரவாதமும் மோதிக் கொண்டிருந்த காலம்.

பாரதிக்கு, பலவேறு உதாரணங்களையும் வரலாற்றுச் செய்திகளையும் எடுத்துக் காட்டி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு, நிச்சயம் வெற்றி பெறுவோம், நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்னும் நம்பிக்கையூட்ட வேண்டிய உணர்வு வலுவாக இருந்தது.

நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. நம்பிக்கையின் முக்கிய லக்ஷணம் விடா முயற்சி, கடும் முயற்சியை அக்காலத்தில் தவம் என்றார்கள். நமது நாட்டில் எத்தனையோ மகான்கள் தோன்றி பல இடையூறுகளையும் தடைகளையும், கஷ்டங்களையும் தொல்லைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டித் தங்கள்