பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நம்பிக்கை என்னும் தலைப்பில் 3B

பலர் இந்து தேசத்திற்குத் தன்னாட்சி வேண்டுமென்று தொழில்செய்து வருகிறார்கள். பலர் ஆரிய வேதத்தைச் சரண்புகுந்து பூமண்டலம் வாழும்படி செய்ய வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். இவ்வனைவருக்கும் வெற்றியுண்டு. நம்பிக்கை உண்டானால் வெற்றியுண்டு” என்று பாரதியார் எழுதுகிறார்.

இங்கு பாரதி, நமது நாட்டு பாஷைகளை அபிவிருத்தி செய்வது, நமது பூர்வ சாஸ்திரங்களை உலகரியச் செய்வது, நமது பழம் பெருமைகளை, பாரம்பரியங்களை உலகரியச் செய்வது, நமது நாட்டுச் செல்வங்களைப் பாதுகாப்பது, நமது சுயாட்சியை நிறுவுவது, நமது வேதங்களின் அடிப்படையில் பூமண்டலத்தை வாழும்படி செய்வது, ஆகியவற்றையெல்லாம் நமது விடுதலை இயக்கத்தின் கூறுகளாகக் குறிப்பிட்டிருப்பது நமது நாட்டின் உண்மையான பெருவடிவத்தை உயர்த்திக் காட்டும் மேலான அரசியலாகும். பாரதி அரசியலை தன்னாட்சி வடிவத்தில் மட்டும் காணவில்லை. நாட்டின் முழுமையான விடுதலையின் வடிவத்தில் காண்கிறார்.

பாரதியார் வாசக ஞானம் என்னும் தலைப்பில் ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அதில் அரசியல் மற்றும் இதர லெளகீக விஷயங்களைப் பற்றி மிகவும் நுட்பமாக எடுத்துக் கூறுகிறார். சாதாரணமான விஷயங்களைப் பற்றி மக்களை பாதிக்கும் பிரச்சனைகளைப் பற்றி, எளிதில் அனைவரும் புரிந்து கொள்ளும் முறையில், மக்களின் போக்கு நடையில் பாரதி தன்னுடைய உரைநடையில் தனது கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார்.

இக்காலத்தில் பலவேறு துறைகளைப் பற்றிய அறிவு அனைவருக்கும் அதிகரித்துவருகிறது. ஆனால் நாம் அறிந்துள்ள அறிவின்படி அடைந்துள்ள ஞானத்தின் அளவில் நமது நடைமுறை செயல்பாடுகள் நிறைவாக இல்லை. குறைவாகவே உள்ளது.