பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. гымбіняхъ пятерно заранене 42

சுரங்கம் சிறு தொழில் முதலியன) எரிபொருள், இயற்கை வாயு, பெட்ரோல், வாணிபம் வர்த்தகம், கல்வி சுகாதாராம், கலாச்சார வளர்ச்சி, ஆடல்பாடல், விளையாட்டு முதலிய அனைத்துத் துறைகளும் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் வந்து விட்டன. அவை மேலும் விரிவு பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனவே அரசியல், அரசு, அரசாங்க நிர்வாகம் என்பது அனைத்தளாவியதாக விரிவடைந்து கொண்டு வருகிறது. இதில் அரசியல் கட்சிகளின் பங்கும் அதிகமாக உள்ளது. அரசியலில் ஒழுக்கம், நல்ல நடத்தை, சேவை, அர்ப்பணிப்பு, திறமை, பயிற்சி, செயல் திறன், தீவிரமான செயல்பாடு, மக்கள் பால் தயை, இரக்கம், அன்பு, நாட்டுப்பற்று, சமுதாய வளர்ச்சி பற்றிய ஆர்வம், ஒரு பக்கம், மறுபக்கம் வாய்ச் சவடால், அள்ளி வீசப்படும் (போலி) வாக்குறுதிகள், ஊழல்கள், லஞ்சம், ஏமாற்றுவித்தை, மோசடி, சுயநலம், நாட்டைப் பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் அக்கரையின்மை, போலி வேடம், பயிற்சியின்மை, செயல்திறனின்மை முதலியவற்றை நாம் சந்திக்க வேண்டியதிருக்கிறது. அத்துடன் உண்மையிலேயே சொல்லுக்கும் செயலுக்கும் இடையே உள்ள இடைவெளியின் துாரம் இவைகளை எப்படி எதிர் நோக்குவது, நல்லனவற்றை எப்ப்டி வளர்ப்பது, அபிவிருத்தி செய்வது, மேம் படுத்துவது, அல்லன வற்றைக் களைவது, சொல்லுக்கும், செயலுக்குமுள்ள இடைவெளியைக் குறைப்பது என்பது எல்லாக் காலத்திலுமுள்ள பிரச்னையாகும்.

விடுதலைப் போராட்ட காலத்திலும் கூட நடிப்புச் சுதேசிகளைப் பற்றி பாரதி ஒரு அருமையான பாடலைப் பாடியுள்ளார். நெஞ்சில் உறமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி என்று தொடங்கும் அப்பாடல் கருத்துச் செரிவு மிக்கதாகும்.