பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTTT TTTTTy TTLLL LLLLL LLLLLLLTTTiSK SSLLLSS S 00

நுட்பமான கருவிகள் செய்திருக்கிறார். ஹிந்து தேசத்துத் தொழிலாளிகளைக் கொண்டு, அந்த ஸ9கூடிமக் கருவி -களையெல்லாம் செய்து கொண்டார். அந்தக் கருவிகளின் நேர்த்தியைப் பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும் எந்திரிகளும் ஆச்சரியப் படுகிறார்கள்.

தன்னுடைய அபூர்வமான, அதிசயிக்கத்தக்க கருவிகள் மூலம் செடிகளின் நாடியுணர்ச்சிகளை ஆராய்ந்த தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

“இத்தகைய மகானாகிய மேற்படி ஜகதீச சந்திர வஸ்நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்த பக்தியுடையவர். ஹிந்துக்களின் மேன்மையைப் பற்றி அவர் வார்த்தை சொல்லும் போது அந்த வார்த்தைகளில் மிகச் சிறந்ததொரு ஜீவநாதம் உண்டாகிறது”என்று பாரதி குறிப்பிடுகிறார்.

பூரி ஜகதீஷ் சந்திர வஸ்வின் உரையை அப்படியே பாரதி தனது கட்டுரையில் கொடுக்கிறார்.

வஸ் சொல்லுகிறார். சாதாரணக் கருவிகளால் மகத்தான காரியங்களை நிறைவேற்றிய மஹான்களின் சந்ததியிலே நாம் பிறந்திருக்கிறோம். . . . . ஒருவன் ஒரு பெருங்காரியத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தினால் அடைத்திருந்த கதவுகள் திறக்கும். அஸாத்தியமாகத் தோன்றுவது அவனுக்குச் சாத்தியமாகும். உண்மை தேடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் சிற்றின்பங்களை விரும்பலாகாது. லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும் ஒன்று போலக் கருதி அவன் தனது ஜீவனை உண்மைக்கு நைவேத்தியமாக விட வேண்டும். பாரத தேசம் இப்போது வென்று காப்பாற்ற வேண்டிய வஸ்து யாது?