பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. காலனிக் கொள்ளை 52

4. காலனிக் கொள்ளை:

ஐந்தாறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய நாட்டினர் பலரும் குறிப்பாக பிரிட்டிஷ்காரர்களும், ஸ்பானிஷ்காரர்களும் (ஸ்பெயின் தேசத்தார்) கடல் கொள்ளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலரும் தங்கள் கப்பல் பயணத்தில் கடல் வழியாக அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்கும் சென்றார்கள். அந்த நாடுகளிலும் புகுந்து அங்கிருந்த ஏராளமான இயற்கைச் செல்வங்களையும் கொள்ளையடித்தார்கள். அந்த நாடுகளில் பலவற்றைக் காலனிகளாகப் பிடித்தார்கள். காலனிகளைப் பிடிப்பதற்காக அவைகளைக் கைப்பற்றுவதற்காக அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த பூர்வ குடிமக்களை ஆயிரக் கணக்கில் லட்சக்கணக்கில் கூட இரக்கம் இன்றிக்கொன்று அழித்தார்கள். அதன் காரணமாக வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, ஆப்பிரிக்க நாடுகள் முதலியவற்றிலும், சுதேசி மக்கள் பலரும் இன அழிப்பு செய்யப் பட்டு பூண்டோடு அழித்து ஒழிக்கப் பட்டார்கள். இவையெல்லாம் காலனிக் கொள்ளை என்று உலக வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் காலனிக் கொள்ளைகளுக்காகவும், வியாபார ஆதிக்கத்திற்காகவும், ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் சிலுவை யுத்தங்கள் என்றும், நூறாண்டு யுத்தங்கள் என்றும் பல போர்கள் நடந்து அப்போர்களில் பல லட்சக்கணக்கான பேர் பலியானார்கள்.

கடல் கொள்ளை, காலனிக்கொள்ளை, வியாபாரக் கொள்ளை ஆகியவை மூலம் திரட்டிய செல்வங்களை வைத்து தங்கள் நாடு நகரங்களை நவீனப்படுத்தினார்கள். நவீன விஞ்ஞான வளர்ச்சி மூலம் உற்பத்திக் கருவிகளும் உற்பத்தி சாதனங்களும் உற்பத்தி சக்திகளும் வளர்ச்சியடைந்தன. தொழில் வியாபார முயற்சிகள் அதிகரித்தன. ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சிகள் ஏற்பட்டன. புதிய லெளகிக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன.