பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பாரத ஜாதி 70

கிறிஸ்தவர்களாயினும், பார்சிகளாயினும் மகமதியராயினும், எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடிய போதிலும் பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து அதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலேயே சேர்த்துக் கணக்கிட வேண்டும். இது ஒரே ஜாதி, பிரிக்க முடியாதது. அழிவில்லாதது. இதற்கு ஆதாரமும் மூல பலமுமாவது யாதெனில் அதுவே ஆரிய சம்பத்து. அதாவது அதுவே ஆரியரின் அறிவும் அந்த அறிவின் பலன்களுமாகும்.

xx xx xx