பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTyL LSL0LSL TLLy CCCCC LLLLLLLLLLLLLiSK LLLLLS 00

வழி தேடி, பலர் வயிறு வாடச் சிலர் வயிறு ஜிர்ண சக்தியில்லாமல் போக மனிதர் பரிதாபகரமாகக் காக்கையினும் கடைப்பட்ட வாழ்வு வாழ்ந்து வீணே நசித்துப் போகிறோம். ஏழைகள் வருந்தினால் நமக்கென்ன என்று நினைப்பவர் பரம மூடர். பலர் செளகர்யப்படும் வரை, சிலர் செளகர்யம் அடைதல் இந்த உலகத்தில் சாத்திய மில்லை. பொருளாளி நல்ல உடுப்புகள் அணிந்து கொண்டு தெருவில் உலாவப் போவதையும், அவனுடைய கன்னத்தில் சதை உப்பியிருப்பதையும் அவனுடைய ஏவலாட்களின் தொகையும் சிறுமையும் மேற்படி பொருளாளி பிறரை அவமரியாதை செய்வதையும் கண்டு மயங்கிப் போய் அவர் பரமானந்த நிலையில் இருப்பதாக ஏழை நினைக்கிறான். அது தவறு. அவன் மனத்தில் ஒளிந்து கிடந்து அவன் உயிருக்கு நரக வேதனை செய்யும் துயரங்களை ஏழை அரிய மாட்டான். ஒரு வகுப்பின் மனம், மற்றொரு வகுப்புக்குத் தெரியாமலும் ஒருவனுடைய மனுஷ்ய நாகரிகம் அவ்வளவு மூடத்தனமான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது” என்று பாரதி குறிப்பிடுகிறார்.

இங்கு வறுமையும் ஏற்ற தாழ்வும் சமுதாயத்தில் நீடித்திருக்கக் கூடாது என்பது பாரதியின் கருத்தாகும். அத்துடன் மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகாரத்தை பூமிதேவி கொடுக்கும். அதற்கேற்றவாறு முறைப்படுத்தி சாகுபடி முறையைக் கொண்டு வந்து செயல் படுத்த வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும். அத்துடன் மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் யாரும் பட்டினி கிடக்காமல் அனைவருக்கும் உணவு கிடைக்க ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தீமைகள் பெருகும். போட்டியும் பொறாமையும் மோதலும் உண்டாகும் என்று பாரதி கருதுகிறார்.