பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLL LLLLLL LL LLLLLLLS LCL LLL LLLLLLLLLLLLSK SLLLLLLLLSS S 00

எழுதினார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்வம், சோஷலிஸம், கம்யூனிஸம் என்றெல்லாம் பல கருத்துக்கள் எழுந்தன. வறுமைக்கு எதிராக ஏழை எளிய மக்களின் கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் வர்க்கப் போராட்டங்கள் என்று வகுத்துக் கூறினார்கள். அந்த உள் நாட்டுச் சண்டைகளைத் தவிர்க்கவும், திசை திருப்பவும் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் அடுத்த நாடுகளின் மீது போர் தொடுத்து, காலனிகளுக்கான போர்களையும் தொடுத்து அவை பன்னாட்டுச் சண்டைகளாகவும் உலகச் சண்டையாகவும் விரிவு பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். சிலுவை யுத்தங்கள் என்றும், நூறாண்டு யுத்தங்கள் என்றும் ஐரோப்பாவில் நடைபெற்று ஏராளமாக உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும்

ஏற்பட்டன.

ஆனால் நமது நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புப் போர்கள் நடந்து முடிந்து அவர்களுடைய ஆட்சி ஏற்பட்ட பின்னர், அரசியலில் தாற்காலிகமாக சற்று அமைதி இருந்தது. ஆயினும் அன்னிய ஆட்சியின் கொள்ளையாலும், ஆக்கிரமிப்பாலும், கொடுங்கோல் ஆட்சி நிர்வாகத்தாலும், வியாபாரக் கொள்ளையாலும், வரிக்கொடுமை, வட்டிக் கொடுமை, விலை வாசிக் கொடுமையாலும், தொழில் நாசத்தாலும், கால்நடை நாசத்தாலும் வறுமை அதிகமாகி பல லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் பசி பட்டினியால் மடிந்தார்கள். இந்தப் பஞ்சத்தால் அதிகமான அளவில் கிராமப் புறத் தொழிலாளர்களும் ஏழை எளிய மக்களும் பாதிக்கப் பட்டார்கள். அதிலும் சாதிய முறையில் பார்த்தால் தாழ்த்தப் பட்ட மக்களும் பிற்படுத்தப் பட்ட மக்களும் மிகவும் அதிகமாக பாதிக்கப் பட்டு வறுமையால் பெரும் பெரும் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் பசி பட்டினிக்கும் ஆளானார்கள்.

அது பற்றி பாரதியார் குறிப்பிடும் போது, “கிழக்கு