பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அன்பு வழி BB

வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம் - இன்று

பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை யுண்டென்பான்”

என்று குறிப்பிடுகிறார்.

இந்திய நாட்டில் ஜாதிப் பிரிவுகளும் வேறு பாடுகளும் பாகு பாடுகளும் என்று தோன்றியதோ அன்று தொட்டே அதற்கு எதிர்ப்பான கிளர்ச்சிகளும் முயற்சிகளும் நடந்து வந்திருக்கின்றன.

இந்த நாட்டின் மகத்தான காவியங்களான உலகம் போற்றும் இதிகாசங்களான இராமாயணம் வேடர் குலத்தில் பிறந்த வால் மீகியால் எழுதப் பட்டதாகும். மகா பாரதமும், பாகவதமும் செம்படவப் பெண்ணின் மகனான வியாச முனிவன் எழுதியதாகும். தமிழுக்கு இலக்கணம் வகுத்த குருமுனி அகத்தியன் வியாச முனிவரின் தம்பியாகும். இந்த உண்மைகளையெல்லாம் நாம் உலகறியச் செய்ய

வேண்டும்.

இன்னும் உலகம் போற்றும் திருக்குறள் செய்த திருவள்ளுவர் வள்ளுவர் குலத்தைச் சேர்ந்தவராகும். ஆதி பகவன் மகனாகும். மகான் இராமானுஜர் ஜாதி வேறுபாடுகளை நீக்கி வைணவ சம்பிரதாயத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்தார். நாலாம் குலத்தில் பிறந்தவராகக் கூறப்படும் நந்தனாருக்கும் திருப்பாணாழ்வாருக்கும் கோவில்களில் சன்னதி அமைத்து வழி படுகிறோம். இன்னும் இது போன்ற வரலாற்றுச் செய்திகள் ஏராளமானவை நமது பெருமைக்குரியனவாகும். இவைகளை -யெல்லாம் நாம் உலகரியச் செய்ய வேண்டும்.

இக்காலத்திலும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார்

அவர்களைத் தேசியத் தலைவர்களில் ஒருவராக நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். உயர் திரு.கே.ஆர்.நாராயணன் அவர்களை