பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் oppre zgoguë:”Gëgëse--e. சீனிவாசன் 91

தேவன் என்றும் சொல்வதற்கு உரியவனாவான். மிருக ஜன்மங்களை நாம் ஒவ்வொருவரும் கூடிணந்தோறும் நீக்க முயல வேண்டும்” என்று பாரதி தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தனி மனித மேம்பாட்டிற்குப் பயிற்சி மிகவும் அவசியம். பயிற்சியில் குழந்தைப் பருவத்தில் தாய் தந்தையர் தங்கள் அனுபவத்தின் மூலம் குழந்தைகளுக்குப் பல விஷயங்களையும் தாங்கள் அறிந்திருந்ததைத் தெரிவித்து சொல்லிக் கொடுத்து குழந்தைகளைப் பயிலுவிக்கிறார்கள். இதுவே அவர்களுக்கு அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக அமைகிறது. தாய் தந்தையர்கள் அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக இருந்தால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியின் அஸ்திவாரமும் பலமாக அமைகிறது.

அதன் பின்னர் குழந்தைகள் பள்ளிகளில் பயிற்சி பெறுகிறார்கள். பள்ளிக்குப் போகாத குழந்தைகள் தெருக்களில் வேலை செய்யும் இடங்களில் பயிற்சி பெறுகிறார்கள். பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம், பாடப் புத்தகங்கள் மூலம், இதர நூல்கள் மூலம், கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் பயிற்சி பெறுகிறார்கள்.

ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தில் மூன்று, நான்கு அல்லது ஐந்தாறு பிள்ளைகளையும் பெற்றோர்கள் ஒரே மாதிரிதான் கவனிக்கிறார்கள். உணவளிக்கிறார்கள். ஆனாலும் அந்தப் பிள்ளைகள் உடல் வளத்திலும் சரி, உள்ளப் பண்பாட்டிலும் சரி, அறிவு வளர்ச்சியிலும் சரி, ஏற்றத் தாழ்வாக இருக்கிறார்கள். சற்று வித்தியாசப் பட்டும் இருக்கிறார்கள். அதற்குக் காரணமென்ன? இது ஒரு புதிரான கேள்வியாகும்.

அதே போல், பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு எல்லாப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்கள் ஒரே மாதிரி தான் பாடம் சொல்லிக்