பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 உண்மையையும்', 'எல்லா உயிர்களிடத்தும் தன்னையும் தன்னிடதே எல்லா உயிர்களையும் காண்பவனே காட்சி யுடையவன்' என்று கண்ணபிரான் அதே கீதையில் சொல்லிய கொள்கையையும் வேதோப நிஷத்துகளின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள் உலகத் திலுள்ள மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதி வேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை செலுத்து கிரு.ர்கள். "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது” என்ற குறளின்படி, இனிய சொற்கள் சொல்வ தினின்றும் நன்மைகள் விளைவது கண்டு மானிடர் ஒரு வருக்கு ஒருவர் கொடுஞ் சொற்கள் வழங்குவது மடமை’ என்பது உலகத்தில் சாதாரண அனுபவமுடையவர்களுக் கெல்லாம் தெரியும். அங்ங்னம் தெரிந்தும் கொடுஞ் சொற் களும் கோபச் செயல்களும் நீங்கியவர்களை உலகத்தில் தேடிப் பார்த்தாலும் காண்பது அரிதாக இருக்கிறது. "மரணம் பாவத்தின் கூலி என்று கிருஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படி யிருந்தும், பாவத்தை அறவே ஒழித்த கிருஸ்தவர்கள் எவரையும் காணவில்லை. நாமெல்லோரும் பாவிகள் என் பதைப் பல்லவிபோல சொல்லிக்கொண்டு காலங் கடத்து கிருர்கள். இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! சாதாரணமாக வியாபாரம், விவ சாயம் முதலிய காரியங்களிலே கூட மனிதர் நிச்சயமாக லாபங் கிடைக்கும் என்று தெரிந்த வழிகளே அநுசரிக்க முடியாமல் கஷ்டப்படுகிருர்கள். இந்தப் பெரிய சக்தி