பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 முடியுமா, முடியாதா என்பது இப்போது முக்கியமாக ஆலோசிக்க வேண்டிய விஷயம். முடியாதென்று ஐரோப் பியரின் எண்ணம். ஏனென்ருல் கீழ்திசை ஜனங்கள் தம்மைத்தாம் கவனித்துக்கொள்ள முடியாமலிருக்கும் வரை தானே ஐரோப்பியர் கீழ் திசையாரை வந்து இம்சிக்கவும், கொள்ளையிடவும் சாத்தியமாகும். ஆதலால் கீழ்திசைக்காரரின் ஜன்மஸ்வபாவத்திற்கே பொதுஜன ஆட்சி பொருத்தமில்லாத விஷயமென்று ஐரோப்பியர்கள் தாம் நம்புவதுடன், நம்மையும் நம்புமாறு பலவந்தம் செய்து வருகிருர்கள். இடையே ஜப்பான் தேசமொன்று வந்து சேர்ந்தது. ஜப்பான் தேசவாலிகள் பிரதிநிதி ஆட்சி முறைமை ஏற்பாடு செய்துகொண்டு வெகுநேர்த்தியாக நடத்திவரத் தொடங்கிவிட்டார்கள். இதைப் பார்த்த வுடனே ஐரோப்பியர்க்கு மூஞ்சி சுருங்க ஆரம்பித்தது. ஜப்பான் மட்டும் ஏதோ விதிவிலக்காக இவ்வாறு மேம் பாடு பெற்றதேயன்றி மற்ற நாடுகளுக்கெல்லாம் அவ்விதம் நடத்திவர இயலாதென்று நமது ஐரோப்பிய நண்பர்கள் சொல்லத் தொடங்கினர்கள். சமீபத்தில், பாரளிக (பெர்ஷியா) தேசம் பிரதிநிதியாட்சி முறைமை ஸ்தாபனம் செய்துகொண்டது. நமது ஐரோப்பிய நண்பர்களுக்கு யோசனை ஜாஸ்தியாய் விட்டது. இதென்னடா! வெள்ளை நிறமற்ற ஜனங்களிடம்கூட மனுஷபாவம் இருக்கிறது போல் தோன்றுகிறதே, என்று அவர்கள் ஆச்சரியமடைந்து வருகிருர்கள். 率 事 举 என்ன செய்யலாம். பாவம்! உலகம் முழுதையும் சதாகாலத்திலும் ஐரோப்பியர்களே உன்னத நிலையிலிருந்து தம்மிஷ்டப்படி இம்சை செய்துவர முடியாதென்றே காணப்படுகின்றது!