பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கொண்டிராவிட்டால் இன்னும் அப்படியே வேலை செய் வார்களென்பதும் ஸர்க்கார் ப்ரசுரம் செய்யப் போகிற அறிக்கையில் நன்ருக விளங்குமாம். ஆதலால், ஐர்ல்ாந்தை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கும் கைப்பிடியை நெகிழ விடப் போவதில்லையென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லுகிரு.ர். இங்கு, 'மீ தெழும் மொக்குளன்ன யாக்கையை விடுவ தல்லால் சீதையை விடுவதுண்டோ, இருபது திண்தோள் உண்டா(க)?" (நீர் மீதெழும் குமிழி போன்ற இந்த சரீரத்தை விட்டாலும் விடுவேனேயல்லாமல், என் உறுதியான தோள் இருபது மிருக்கையிலே, நான் ஸிதையை விடுவேனென்று நினைக்கவுஞ் செய்யலாமோ?) என்று ராவணன் சொல்லியதாகக் கம்பர் எழுதியிருக் கிற வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன. ராவண னுடைய கதி மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக்கும் வரக்கூடா தென்று நான் மனப்பூர்வமாகக் கடவுளை வேண்டுகிறேன். ஐர்லாந்து தன் கடற்படையையும் நிலப்படையையும் தன் இஷ்டப்படி சமைத்து நடத்துவதென்ற அம்சம் சேர்ந்த எந்த ஏற்பாட்டையும் ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் எந்தக் காலத்திலும் ஒப்புக்கொள்ள முடியாதென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தெரிவிக்கிருர். இந்த விஷயத்தை ஐயந் திரிபற, மிகத் தெளிவாக, எல்லோரும் உணரும்படி அழுத் திச் சொல்ல விரும்புவதாவும் அவர் தெரிவிக்கிரு.ர். எந்தக் காலத்துக்குமா? அதாவது, யுகாந்தம் வரைக்குமா? உலக முடிவு வரை, எப்போதுமே ஐர்லாந்துக்குத் தன் இஷ்டப் படி படை சமைத்துப் பராமரிப்பதாகிய, மற்றக் குடியேற்ற