பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 5. ஹே காளீ! எண்ணி லாத பொருட்குவைதானும் ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும், தண்ணி லாவின் அமைதியும் அருளும், தருவள் இன்றென தன்னை யென்காளி; மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்; வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன். 1 தானம் வேள்வி தவங்கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்; வானம் மூன்று மழைதரச் செய்வேன், மாறி லாத வளங்கள் கொடுப்பேன்; மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை வண்மை யாவும் வழங்குறச் செய்வேன், ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்; நான்வி ரும்பிய காளி தருவாள். 2 6. பகைவனுக்கு அருள்வாய் பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே. பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்ருன்-நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றன். (பகைவ)