பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 29. பாருக்குள்ளே சமத்தன்மை-தொடர் பற்றுஞ் சகோதரத் தன்மை யாருக்கும் தீமைசெய் யாது-புவி யெங்கும் விடுதலை செய்யும் 30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்; பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் 31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில் ஒங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே!-இந்த நானில மாந்தருக் கெல்லாம் 8. கண்ணன்டஎன் தந்தை (நொண்டிச் சிந்து) பூமிக் கெனைய னுப்பி னன்;-அந்தப் புதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு; நேமித்த நெறிப்படியே-இந்த நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே போமித் தரைகளி லெல்லாம்-மனம் போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார். சாமி இவற்றினுக் கெல்லாம்-எங்கள் தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். செல்வத்திற்கோர் குறையில்லை;-எந்தை சேமித்து வைத்த பொன்னுக் களவொன்றில்லை; கல்வியில் மிகச் சிறந்தோன்-அவன் கவிதையின் இனிமையோர் கணக்கி லில்லை;