பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 13. இந்தியாவின் அழைப்பு 19-థ్రులిడి) 192t. வேண்டுகோள் அன்பிற் கினிய இந்தியா! அகில மதங்கள், நாடுகள், மாந்தருக் கெல்லாம் தாயே! எங்கள் உணர்வினைத் துரண்டிய சேய்தெடுங் காலத்தின் முன்னே சிறந்தொளிர் குருக்களை யளித்துக் குவலயங் காத்தனை திருக்கிளர் தெய்வப் பிறப்பினர் பலரை உலகினுக் களித்தாய்! உனதொளி ஞானம் இலகிடநீயிங் கெழுந் தருளுகவே! விடுதலை பெறநாம் வேண்டிநின் மறைவு படுமணி முகத்தைத் திறந்தெம் பார்வைமுன் வருகநீ! இங்குள மானுடச் சாதிகள் பொருகளந் தவிர்ந்தமை வுற்றிடப் புரிகநீ! மற்றவர் பகைமையை அன்பினுல் வாட்டுக! செற்றவர் படைகளே மனேயிடந் திருப்புக! தாயே, நின்றன் பண்டைத் தநயராம் மாயக் கண்ணன், புத்தன், வலிய சீர் இராமனும், ஆங்கொரு மஹமது மினையற்ற விராவுபுகழ் வீரரை வேண்டுதும் இந்நாள்! "தோன்றினேன்” என்று சொல்லி வந்தருளும் சான்ருேன் ஒருமுனி தருகc எமக்கே! மோசே, கிறிஸ்து, நானக் முதலியோர் மாசற வணங்கி மக்கள் போற்றிடத் தவித்திடுந் திறத்தினர் தமைப் போலின்ருெரு பவித்திர மகனைப் பயந்தருள் புரிகநீ! என்முன் வந்து நீதியின் இயலைச் செம்மையுற விளக்குமொரு சேவகனே அருளுக நீ......