பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கட்டின்றி வாழ்வோம்; புறத்தளைக் கட்டினை எட்டுணை மதியா தேறுவோம்; பழம்போர்க் கொலைத் தொழிற் கருவிகள் கொள்ளா தென்றும் நிலைத்தன ஆகிய நீதிக் கருவியும் அறிவும் கொண்டே அரும்போர் புரிவோம்; வறியபுன் சிறைகளில் வாடினும்; உடலை மடிய விதிப்பினும்; "மீட்டு நாம் வாழ்வோம்’ என் றிடியுறக்கூறி வெற்றி யேறி, ஒடிபடத் தளைகள், ஒங்குதும் யாஅமே. பூரீமதி மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்பவர் எழுதிய கவிதையின் தமிழாக்கம். 14. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து அறத்தினல் வீழ்ந்து விட்டாய்; அன்னியன் வலிய னகி மறத்தினல் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்யாய்; முறத்தினல் புலியைத் தாக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினல் எளியை யாகிச் செய்கையால் உயர்ந்து நின்ருய்! I வண்மையால் வீழ்ந்து விட்டாய்! வாரிபோற் பகைவன் சேனை திண்மையோடு அடர்க்கும் போதில் சிந்தனை மெலித லின்றி ஒண்மைசேர் புகழே மேலென்று உளத்திலே உறுதி கொண்டாய்; உண்மைதேர் கோல நாட்டார் உரிமையைக் காத்து நின்ருய்; 2