பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6፭ நம்முடைய கப்பல்களை நொறுக்கிப் போடுவார்கள் . பாம்பைக் கொல்ல ஒருகீரிப் பிள்ளையுண்டு, பகை பகையை வளர்க்கும். நாம் மற்றவரை அடிமைப் படுத்தினல் நம்மை அடிமைப்படுத்த வேறு யாரேனும் முளைப்பார்கள். இவ்வுலகத்தில் நாம் செய்கிற ஒவ்வொருசெய்கையும். ஸ்வப்ரயோஜனத்தைக் கருதாமல். லோகோபகாரத்தை முன்னிட்டுக் கொண்டுசெய்யவேண்டும், தீராத ஆவலும், அவஸரமும், ஒயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாகமாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். யந்திரப்பீரங்கிகளும் ஸப்மரீன்களும் நாகரிகத் துக்கு அடையாளமல்ல. நிலக்கரிச் சுரங்கங்களும் ஆகாச வெடிகுண்டுகளும் மனுஷ்யனுக்கு பலமல்ல துணையல்ல அவை அபிவிருத்திக்கு லக்ஷணமல்ல. அவை மனிதனுக்குப்பகை. மனுஷ்யனையும் அவனுடையநாகரிகத் தையும் அழிக்கும் குணமுடையன. கர்வத்தினலே மரணம் உண்டாகும். அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மை யான நாகரிகத்தையும் நித்ய ஜீவனையும் விளைக்கும். இப்படி நூற்றுக் கணக்கானiஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்த ஸமயத்தில் மனுஷ்ய ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத்தவிர வேறு யாருமில்லை. கண்ணைத் நிறந்து பூமண்டல முழுதையும் ஒரே பார்வை யாகப் பார்த்தால் நான் சொல்வதுண்மையென்பது தானே விளங்கும். இவ்விஷயத்தை ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளி நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான பிர சங்கிகளை அனுப்பும்படி ராஜாக்களையும், ஜமீன்தார்களை யும், செட்டியார்களையும், மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன். -பாரதி தமிழ்.