பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நகரங்களனைத்திலும் ஒரே மாதிரியான இயல்பைக் காண லாம். அவற்றின் முகங்களைக் காட்டுவதில்லை முகமூடிகளைக் காண்பிக்கின்றன. ஜனம் ஜீவனதலால் அதற்கு ஆத்மப் பிரகாசம் வேண்டும். அது ஸ்ருஷ்டி செய்யும். கல்வி, கலை, கோயில் முதலியன ஜனத்தின் ஸ்ருஷ்டிகளாம். இவை ஒரே விருந்தில் பலவித உணவுகள் போலே உண்மையை அறிந்து இன்பமடைவதில் வெவ்வேறு சுவை தருகின்றன. மனுஷ்ய லோகத்தை உயிர் வளமுடைய தாக்கிப் பலவிதங்களில் அழகு படுத்துகின்றன. ஆனல் ஜாதிகள் ஸ்ருஷ்டி செய்வதில்லை. அவை பெருக்கு கின்றன, அழிக்கின்றன; பெருக்குதலாவது சோறு துணி சேர்த்தல் போன்ற தொழில்வகை. பெருக்கும் கூட்டங்கள் அவசியமே. அழிக்குங் கூட்டங்களும் அவசியமாக இருக்கக் கூடும். ஆனால் இவை பேராசையும், விரோதமும் சேரும் போது, மனுஷ்ய ஜீவனை ஒரு மூலையில் ஒதுக்கி விடுகின்றன. இதனுல் இசை தவறுகிறது. ஜனங்களின் சரித்திரம் அழிவை நோக்கிக் கழுத்தொடியும் வேகத் துடன் செல்லுகிறது. மனுஷ்ய ஜாதி உயிருடனிருக்குமிடத்தே ஆதர் சங்களே. உத்தம தர்மங்களைப் பின்பற்றுகிறது. செத்த கட்டுப்பாடாகிவிடும் போது ஆதர்சங்களுக்கு இடங் கொடுப்பதில்லை. அதன் கட்டட மெல்லாம் புறத் தொழிலாகவே நடைபெறுகிறது. உள்ளிருக்கும் தர்மக் காட்சிக்கு அதன் உத்தரம் நேரில்லை. பல வளையாத முரட்டுத் தடைகளைக் கடந்து செல்ல வேண்டியதாகிறது. மனுஷ்ய ஜீவனுக்குத் தனிமைக் குணமொன்றிருக் கிறது. தனிமையாகிய களத்திலே தான் அவனுடைய ஆத்மா தன்னைப் பிரகாசப்படுத்திக் கொள்ளவும் வளரவும் ஸ்வாதீன மடைகிறது. மனிதன் பொது நிலையை விட்டு