பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வளர்ச்சியால் மனிதனுக்கு மனிதன் பெரிய விபத்தாய் விட்டான். அக் கொள்கை தீராத பயத்தை விளைவிப்ப தல்ை, மேன்மேலும் பெரிய ஆபத்தாக மூண்டு வருகிறது. கூட்டத்தின் புத்தி ஒரு குருட்டு சக்தி. நீராவி முதலிய பூத சக்திகளைப் போலவே அதையும் பிரமாண்ட மான பலம் சேர்க்க உபயோகப் படுத்தலாம். ஆதலால் லோபத்தாலும் பயத்தாலும் தமது ஜனங்களை வலிமைக் கருவிகளாக்க விரும்பும் அரசர் இந்தக் கூட்டப் புத்தியைத் தமக்கு வேண்டிய வழியில் பயிற்சி செய்கிருர்கள். ஜனங்களுடைய மனதில் எங்கும் பயமும், ஸ்வஜாதிக் கர்வமும், பிற ஜாதிகளிடம் விரோதமும் வளர்த்தல் கடமை யென்று நினைக்கிரு.ர்கள். பத்திரிகைகளையும் பள்ளிக் கூடப் புஸ்தகங்களையும் கோயில் ஆராதனைகளையுங் கூட இந் நோக்கத்துக்குப் பயன்படுத்துகிருர்கள். தெய்வ வி ரோ த மா ன இந்தக் குருட்டுக் கொள்கையைத் தைரியத்துடன் எதிர்த்துப் பேசுவோரை நியாயஸ்தலங்களில் தண்டிக்கிருர்கள்; அல்லது கூட்டத்தி லிருந்து விலக்குகிருர்கள். தனி மனிதன் (லோபதாப) முதலிய, உணர்ச்சிகளின் சமயத்திலும் யோசனை பண்ணுவதுண்டு. ஆனால் ஒரு கூட்டத்தின் உணர்ச்சியுடன் கலக்கும் போது யோசனை செய்வதில்லை. அவனுடைய தர்மப் புலன் மழுங்கிப் போகிறது. கூட்ட மனங்களில் மனிதத் தன்மையை நசுக்கி விடுவதனால் மிகுந்த பலமுண்டாகிறது. ஏனென் ருல் கூட்டப் புத்தி இயல்பில் அநாகரிகமானது. அதன் சக்திகள் பூத சக்திகளைப் போன்றது. இருளின் பெரிய வலியை ஜாதி தனக்குப் பயன்படுத்திக் கொள்வதால் ஜாக்கிறதையாக இருக்கிறது.