பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஜெர்மனி தேசம் இன்றைக்கும் ஐரோப்பாக் கண்டத் தின் வித்யா ராஜதானியாக விளங்குகிறது. ஜெர்மனியில் நமது பாரத கவீந்திரராகிய ரவீந்திரருக்கு நடத்தப்பட்ட உபசாரங்களெல்லாம் அவருக்குச் சேரமாட்டா. பாரத மாதாவின் பாத கமலங்களுக்கே சேரும். ஜெர்மனியில் உங்சாரம் நடந்த மாத்திரத்திலே, அதைப் பின்பற்றி மற்ற முக்கியமான ஐரோப்பிய தேசங்களெல்லாம் அவருக்குப் பூஜை நடத்துமென்பது சொல்லாமலே விளங்கும். அங்ங்னமே நடத்தியுமிருக்கின்றன என்பதைக் கீழே நன்கு விவரணம் புரிவோம். 1921-ஆம் வருஷம், மே மாஸம், 21-ந் தேதியன்று சஹம்புர் கெர் ஜெய்துங்க” என்ற பத்திரிகையில் ஒருவர் எழுதியிருக்கும் நிருபத்தில் ரீமான் டாகுரைப் பற்றிப் பின்வரும் வசனங்கள் கவனிக்கத்தக்கன : "பூரீமான் ரவீந்திரநாத டாகுர் ஸ்பைக்குள் வந்து பிரவேசித்த மாத் திரத்திலே எங்கள் அறிவுக்கெட்டாத ஒரு சக்தி வந்து புகுந்தது போலிருந்தது. இந்த மனிதனுடைய வாழ்க்கை யில் ஒற்றை கூடிணமாவது இவர் எல்லையில்லாத ஜகத் துடன் லயப்பட்டு நில்லாத கூடிணம் கிடையாதென்பது தெளிவாகப் புலப்பட்டது. அவருடைய ஆரம்ப வசனங் களே மிகவும் வியக்கத்தக்கனவாக இருந்தன. கீழ்த் திசைக்கும் மேற்றிசைக்கும் நிகழ்ந்திருக்கும் ஸ்ந்திப்பே இந்த நூற்ருண்டின் மிகப்பெரிய ஸம்பவமென்று ரவீந்திரர் தம்முடைய முதல் வாக்கியமாகக் கூறினர். ஆசியா ஐரோப்பியாவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய உண்மைகள், ஆசியா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய சக்திகள் பல இருக்கின்றன என்பதை ரவீந்த்ரர் மறுக்கவில்லை. இதனை மேற்றிசை உபந்நியாஸங் களிடையே அவர் பன்முறை அங்கீகாரம் செய்திருக்கிருர், இந்தியாவுக்கு வந்த பின்னர் சில ஆங்கிலோ இந்தியப்