பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். இதை யெல்லாம் நான் மறுக்கவில்லை. ஆலுைம், பிச்சை யென்று கேட்டவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை; வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை. சோம்பேறி! பிச்சைக்காரன் மாத்திரம்தான சோம் பேறி? பணம் வைத்துக்கொண்டு வயிறு நிறையத் தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளை சீர்திருத்தப் போவது விசேஷம். பொருமையும் தன் வயிறு நிரப்பிப் பிற வயிற்றைக் கவனியாதிருத்தலும், திருட்டும். கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிரு.ர்கள். ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வர் செய்யும் அநியாயம் அதிகம். இதைக் கருதியே ப்ரூதோம் என்ற பிரெஞ்சு தேசத்து வித்துவ்ான் 'உடைமையாவது களவு என்ருர். ஏழைகளே இல்லாமற் செய்வது உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும் கொள்ளை யிடுவதிலும் உபயோ கப்படுத்துகிரு.ர்கள். ஐரோப்பிய யந்திரத் தொழிற்சாலை கள் ஏற்பட்டதிலிருந்து ஏழைகளுக்கு முன்னேக் காட்டிலும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கின்றனவே யன்றி ஏழை களின் கஷ்டம் குறையவில்லை. ஏழைகளைக் கவனியாமல் இருப்பது பெரிய ஆபத்தாக முடியும். கிறிஸ்துவ வேதத்தில் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் முதல் மனிதகிைய ஆதாம் என்பவ னுக்கும் அவனுடைய பத்தினியாகிய ஏவாளுக்கும் இரண்டு