பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அகஸ்மாத்தாக அங்கே பலசாலி நாயொன்று வருமாயின் அந்தச் சமயத்தில் மாத்திரம் பலமில்லாத நாய் அவ் வுணவைப் பலசாலி நாய்க்குக் கொடுத்துவிட்டுத் தான் ஒடிப் போய்விடும்படி நேருகிறது. ஆனல், சில சில சமயங் களில் மாத்திரம் இந்த ஸம்பவம் நிகழ்வதல்லாமல், எப்போதுமே (மனித ஜாதியிலிருப்பது போல்) இஃது நியதமாக நடைபெறுவதில்லை. மேலும், நான்கு பன்றிகள் அல்லது நான்கு நாய்கள் கூடி யாதேனும் ஒரு ஊரில் அல்லது ஒரு காட்டில் கிடைக்கக் கூடிய ஆஹார முழுதும் தங்களுக்கே தஸ்தா வேஜுப்படி சொந்தம் என்றும் தாங்களாக இஷ்டப்பட்டுத் தாங்கள் திட்டம் செய்து கொடுக்கும் அளவுப்படிதான் மற்றெல்லாப் பன்றிகள் அல்லது எல்லா நாய்களும் உண்ணக் கூடுமென்றும் விதி போடுகிற வழக்கம் (மனித ருக்குள் இருப்பதுபோல்) அந்த ஜந்துக்களிடையே காணப் படுவதில்லை. சிறு தொகையான மனிதருக்கு அடுத்த வேளை ஆஹாரம் கிடைப்பது நிச்சயமாகவும் பெருந் தொகையோர்க்கு அடுத்த வேளை சோறு நிச்சயமில்லா மலும் ஏற்பட்டிருக்கும் ஸம்பிரதாயம் மனிதரைத் தவிர வேறெந்த ஜாதி ஜீவர்களிடத்திலும் கிடையாது. 'காக முறவு கலந்துண்ணக் கண்டீரே?' எனவே, மிகவும் முக்கியமானதும் ஜீவஜாதிகளுக்கு பரம அவசியமானதுமாகிய இந்த அம்சத்தில், மனிதரு டைய நாகரீக நிலை மற்றெல்லா மிருகங்கள் பகதிகள் முதலியவற்றின் நாகரீக நிலையைக் காட்டிலும் தாழ் வானது என்பதில் சிறிதேனும் ஸந்தேஹமில்லை. இதில் வேருெரு விஷயம் யாதெனில், மனித ஜாதிக்குள்ளே கூட மற்றெல்லா வகுப்பினரைக் காட்டிலும் ஹிந்துக்கள் அதிக இகழ்ச்சியடைந்து அதிக பரிதாபகரமான ஸ்திதியிலிருக் கிருர்கள்.