பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கல்லூரியில் படிக்கும் அந்த நாட்களிலேயே திரு. பெரிய சாமித் தூரன் பாரதியாரின் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து வெளியிட வேண்டுமென்று ஆர்வமுடன் தொண்டாற்றினர். மகாகவி பாரதியார் 1905ஆம் ஆண்டு முதல் 1921ஆம் ஆண்டுவரை பதினறு ஆண்டுகள் சுதேசமித்திரன் பத்திரிகை யில் எழுதிய கட்டுரைகளை, கவிதைகளை எல்லாம் சேகரிக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டார். பாரதியிடம் கொண்ட பக்தி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு சுதேசமித்திரன் ஆசிரியர் திரு. சி. ஆர். சீனிவாசன் அவர்கள் நன்மதிப்பைப் பெற்ருர். இதனால் பதினறு ஆண்டு களாகச் சுதேசமித்திரன் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளி வந்த பாரதியின் எழுத்துக்களைத் தொகுப்பதற்கு அவர் அனுமதி கிடைத்தது. பதினறு ஆண்டுகளில் வெளியான சுதேசமித்திரன் தினசரிப் பத்திரிகை, வாரம் ஒருமுறை வெளியான சுதேசமித் திரன் வாரப் பத்திரிகை, இவற்றின் தாள்களை ஒவ்வொன்ருகப் பரிசோதித்து பாரதியாரின் கட்டுரைகளை எல்லாம் தொகுப்பது சுலபமான காரியமா? திரு. பெரியசாமித்துரன் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டு பாரதியின் கட்டுரைகளைத் தொகுத் தார். பாரதியாரோடு நெருங்கிப் பழகிய திரு. பரலி சு. நெல்லையப்பர், திரு. பி. பூரீ. ஆகிய அறிஞர்களை அணுகி, அவர் களிடமிருந்து பல அரிய செய்திகளைச் சேர்த்தார். இவை களை எல்லாம் சேர்த்து பாரதி தமிழ்’ என்ற பெரிய நூலை 1953ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார். கல்லூரி வாழ்க்கையில் 'வனமலர் சங்கம்' என்ற சங்கத்தை திரு. பெரியசாமித் தூரன் ஆரம்பித்தார். அதில் நாட்டு விடுதலை, சுதேசி இயக்கம், தமிழ் இலக்கியம் ஆகிய வற்றில் ஈடுபாடுள்ள அன்பர்கள் அங்கத்தினர்களாக இருந்தார்கள். இந்தச் சங்கத்தின் சார்பில் பித்தன்' என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதில் பாரதியின் கட்டுரை களை வெளியிட்டார். பிற்காலத்தில் தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் பிரமத ஆசிரியராக இருந்து அருமையான தொண்டு ஆற்றினர். இந்திய மொழிகளில் தமிழ் மொழியில்தான் முதன் முதலில் ஆங்கிலத்தில் உள்ளதுபோலக் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளாக வெளிவந்தது. இந்தத் தொண்டைச் சிறப் பாகச் செய்தவர் திரு. பெரியசாமித் துர்ரன்,