பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 கிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தால்தான் அடக்கும்படி நேரிடுகிறது என்று ரீமான் லெனின் சொல்லுகிருர். இது முற்றிலும் தவருன கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்ல தாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமே யொழியக் குறைக்காது. பாபத்தைப் புண்ணியத்தாலே தான் வெல்லவேண்டும். பாபத்தைப் பாபத்தால் வெல்லு வோம் என்பது அறியாதவர் கொள்கை. அதர்மத்தை தர் மத்தால் வெல்ல வேண்டும்; தீமையை நன்மையாலேதான் வெல்ல முடியும். கொலையையும் கொள்ளையையும் அன் பினலும் ஈகையாலும்தான் மாற்ற முடியும். இதுதான் கடைசிவரை கைக்கூடிவரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து. சிறிது காலத்திற்கு நோயை அடக்கி வைக்கும். பிறகு, அந்நோய் முன்னைக்காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக வலிமையுடையதாய் ஓங்கிவிடும். ஒருகொலையாளிக் கூட்டம் இன்று தன்னிடமுள்ள சேன பலத்தாலும் ஆயுத பலத்தாலும் மற் ருெரு கொலையாளிக் கூட்டத்தை அடக்கி விடக்கூடும். இதேைல தோற்ற கூட்டம் நாளைக்கு பலம் அதிகப்பட்டு முந்திய கூட்டத்தை வென்றுவிடும். பிறகு, இதைப் பழிவாங்க முயன்று, மற்றது பலவித வேலைகள் செய்து பலமடைந்து இந்தக் கூட்டத்தை அழிக்கும். இது மறுபடி தலைதுாக்கி அதை அடக்கும். இங்ங்ணம் தலைமுறை தலைமுறையாக இவ்விரண்டு கூட்டங்களும் ஒன்றுக் கொன்று தீமை செய்துகொண்டே வரும். இதற்கு ஒய்வே கிடையாது. தர்மத்தாலும் கருணையாலும் எய்தப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கவல்லதாகும். இதனை அறியா தார் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதார் ஆவர். மேலும் ருஷ்யாவிலும்கூட இப்போது ஏற்பட்டிருக் கும் 'ஸோஷலிஸ்ட் ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும்