பக்கம்:பாரும் போரும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO நாடுகளைப் பட்டினிபோட்டுப் பணிய வைக்க முடி யும். ஆனல் அப்படி ஒன்றும் நடந்து விடவில்லை. வெற்றிச் சக்கரம் வேறு பக்கம் உருளத் தொடங்கியது. வீழ்ச்சி: நேச நாட்டினரின் படைகள் ஹிட்லரின் உதவிப் படைகளை வட ஆப்பிரிக்காவிலிருந்து அடியோடு துரத்திவிட்டன; திரிபோலி, டுனிசியா முதலிய பகுதி களே வென்று, சிசிலியின் மேலும் படையெடுத்தன. கிழக்கு முனையில் உருசியர்கள் ஜெர்மானியப் படையை முறியடித்து, காகசஸ் பகுதி முழுவதையும் மீட்டனர். மூன்று இலட்சம் ஜெர்மானியப் போர் வீரர்களைக் கொன்றும், சிறைப்பிடித்தும் வெற்றி கொண்டனர். ஜெர்மானியர் கைப்பற்றியிருந்த உருசிய நாட்டின் பகுதிகள் மிக விரைவில் மீட் கப்பட்டன. பிறகு நேசப்படைகள் இத்தாலியின் மீதும் படை யெடுத்தன. இதாலி அடிபணிந்தது. முசோ லினி தப்பியோடிவிட்டான். இதற்குள் ஜப்பானியர் வியக்கத்தக்க முறையில் பல பசிபிக் தீவுகளையும், மலேயா, இந்தோனேசியா, பர்மா முதலிய பகுதிக ளையும் வென்று இந்தியாவின் கிழக்கு எல்லேயிலும் நுழைந்து விட்டனர். ஆல்ை அமெரிக்க நிலப் படையும், கப்பற்படையும், ஒவ்வொரு நாட்டி லும் சிதறிக்கிடந்த ஜப்பானியப் படையை அழித் தொழித்து விட்டன. அமெரிக்கப் போர் விமா னங்கள் ஜப்பானின்மேல் குண்டுமாரி பொழியத் தொடங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/107&oldid=820506" இலிருந்து மீள்விக்கப்பட்டது