பக்கம்:பாரும் போரும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O 3 போரில் அழிவுற்ற நகரங்கள், உணவுப் பொருள்கள், போர்க்கப்பல்கள், வானஊர்திகள் ஆகியவற்றின் மதிப்பைக் கணக்கிட்டறிய முடியாது. அவ்வழிவின் அளவிற்கு ஓர் உவமை கூறவேண்டுமானல், ஹிட்லரின் போர் வெறியைக் குறிப்பிடலாம். இப்போரில்ை உலக மக்கள் அடைந்த துன்பங் களுக்கு அளவு கூறவியலாது. புதுப்புதுப் பிணிகள் பல தோன்றலாயின. பசியும் பிணியும் எங்கும் தலே விரித்தாடின. நச்சுப் புகைகளும், புதிய வகை வெடி குண்டுகளும் இந்தப்போரில் மிகுதியாகப் பயன்பட்ட தல்ை தட்பவெப்ப நிலேயே மாறுபட்ட தெனக் கூறுதலும் மிகையாகாது. ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டு வெடித்ததனுல், வானிலை மாறுபட்ட தெனின், போரின் கொடுமையை என்னென்பது! போரில் நேரில் ஈடுபடாத நம் நாட்டிலேயே, போரின் விளைவால் பஞ்சமும் பிணி வகைகளும் தலைவிரித் தாடின வென்ருல், போரில் நேரில் ஈடுபட்ட நாடு களின் கதி என்னவாயிருக்கும் எ ன் ப ைத எடுத் துரைக்கவும் இயலுமோ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/110&oldid=820509" இலிருந்து மீள்விக்கப்பட்டது