பக்கம்:பாரும் போரும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 09 கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். மேற் கூறிய இரண்டு வல்லரசுகளும் பிறநாட்டு அரசி யலில் தலையிட்டுத் தங்கள் பொருளாதார ஆதிக் கத்தை அதன் மீது திணிப்பதை நிறுத்தி உலக ஒருமைப்பாட்டிற்கு முயலல் வேண்டும். இந்த நிலக்கு வல்லரசுகள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் வரையிலும் உலகப்போர் ஏற்படுவதற் குரிய சூழ்நிலைகள் உருவாகாதவாறு காத்தல் ஐ. நா. சபையின் வேலையாகும். ஆனல் விரைவில் ஏற்படக்கூடிய உலகப் போரைச் சிலகாலம் பாது காப்புச் சபை தடுத்து நிறுத்தலாமே தவிர, ஒரே அடியாகப் போரை ஒழிக்க முடியாது. கூட்டாட்சி : ஆங்கில நாட்டு அறிஞரான திருவாளர் கோல் என்பார், போரை ஒழிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குக் கூறும் அறிவுரை மிகவும் போற்றற் குரியதாகும். உருசியா நீங்கலாக உள்ள ஐரோப் பிய நாடுகள் யாவும் இனம், ஒழுகலாறு, பண்பாடு ஆகியவற்றில் பெரிதும் ஒற்றுமைப்பட்டிருக்கின் றன. எனவே அவைகள் யாவும் ஒன்றுபட்டு ஒரு கூட்டாட்சி அமைக்கவேண்டுமென்று அவர் கூறுகிருர் : “ உழவு, தொழில் வளர்ச்சி முதலியவை எல்லா நாடுகளுக்கும் பொதுவான முறையில் நடைபெறவேண்டும்; பொதுவான நாணயமுறை அமையவேண்டும்; எல்லா நாடுகளின் ஆறுகளி லுள்ள நீரும் சக்தியும் பொதுவான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்; வாணிக உரிமை, போக்குவரத்துரிமை யாவும் எவ்விதக் கட்டுப்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/116&oldid=820515" இலிருந்து மீள்விக்கப்பட்டது