பக்கம்:பாரும் போரும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O

நூல்களும் எழுதினர்களே தவிர, நாட்டிற்குப் பொதுவான வரலாற்று நூல் எழுத யாரும் முன்வர வில்லை. தமிழகம் மூவேந்தர்களாலும், சில சிற்றர சர்களாலும், பல வேளிர்களாலும் ஆளப்பட்டு வந்தமையால், அவர்கள் தங்கள் தங்கள் நாட்டின் நலத்திலேயே பெரிதும் நாட்டங்கொண்டிருந்தனரே யன்றித் தமிழகத்திற்குப் பொதுவான வரலாறு எழுதுவதில் யாரும் நாட்டங்கொண்டவர்களாகத் தெரியவில்லை. எனினும் பண்டைத் தமிழரின் வீர வரலாற்றை ஓரளவு விளக்கும் காலக் கண்ணுடி யாக விளங்குவன புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற தொகை நூல்களும், தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை முதலிய இலக்கண நூல்களுமேயாம்.

தமிழ்நாட்டு வீரத்துக்கு முறையான வரலாற்று நூல் எதுவும் இல்லையென்றலும், அண்டை நாட்டு வரலாறுகள் போதிய சான்று பகருகின்றன. வட திசை விளங்கும் வான் தோய் இமயத்தின் கொடு முடிகளும், கங்கைப் பேரியாறும், கடாரமும் (Malaya), gj608giu(yth (Sumatra), Fyogpih (Ceylon), solsågålost 65r £6.jä(65th (Andaman Isles), நக்கவாரத் தீவுகளும் (Nicobar Isles) காவிரிக் காவலர்களான இராசராச சோழன், இராசேந்திர சோழன் போன்ருரின் வெற்றிச் சிறப்புக்குச் சான்று பகர்கின்றன. இந்தியத் துணைக்கண்டம் முழுவதை யும் ஒரு குடைக் கீழ்க் கட்டியாண்ட சந்திரகுப்தன், அசோகன் போன்ருர் செலுத்திய மெளரியப் பேரரசின் ஆணை ஆழி தமிழ்நாட்டின் எல்லைக்குள் வரவில்லை. இந் திய நெப்போலியன் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/17&oldid=595533" இலிருந்து மீள்விக்கப்பட்டது