பக்கம்:பாரும் போரும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அவ்வாறு பறையறைவதை உணரமாட்டாத பசுக்களைக் கவர்ந்து வந்து பாதுகாக்கக் கருதி அரசன் தன் வீரர்களை ஏவுவான். அரசனின் ஆணை பெற்ற வீரர்கள் துடியை முழக்கிச் செந்நிறமான வெட்சிப் பூவையேனும் அதலைான மாலையை யேனும் சூடுவர் ; பின் தாங்கள் மேற்கொண்ட போர்ச்செயல் வென்றி விளேக்குமா என்பதை அறிய நற்சொல் கேட்டுப் பின் பகைவர் நாட்டின் மேல் செல்வர். அவ்வாறு செல்லும்போது, ஒற்றர்கள் பகைப்புலத்தில் பசுக்கள் நின்ற இடம், அவற்றின் தொகை, அவற்றைக் காத்து நின்ற வீரர் களின் நிலை ஆகியவற்றை இருளிற் சென்று அறிந்து வந்து கூறுவர். உடனே, வெட்சியார் பகைவர் நாட்டில் ஆநிரை நின்றுள்ள குறுங்காட்டின் வாயில்களைச் சுற்றி வளைந்து, காவலாளர்களைக் கொன்று அங்குள்ள ஆநிரைகளைக் கைக்கொண்டு, எதிர்த்த பகைவர்களோடு பொருது வெல்வர். பிறகு தாம் கைக்கொண்ட ஆநிரையை அரிய வழியிடத் தும் காட்டிடத்தும் வருந்தாமற் செலுத்திச் செல்வர்.

வெட்சியார் வரவைச் சேய்மையிலிருந்து கண்ட அவர்கள் இனத்தினர் மகிழ்ச்சிக் கூத்தாடுவர். தாம் கொண்டுவந்த ஆநிரையை, ஊர்ப் பொதுமன்றில் நிறுத்தி அவற்றை வீரர்களின் தகுதிக்கேற்பப் பகுத் தளித்து, மனங்களித்து ஆடி மகிழ்வர் அவ்வீரர்கள். பின்னும் கிணைப்பறை கொட்டும் பொருநன்,பாணன், விறலி என்பவர்கட்கு வேண்டியன வழங்குவர். பகைப்புலத்தின் தன்மையை அறிந்துவந்த ஒற்றர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/21&oldid=595541" இலிருந்து மீள்விக்கப்பட்டது