பக்கம்:பாரும் போரும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

இரண்டு படையினரும் ஏத்தும் வண்ணம் வீரத் தோடு படை நடுவே மன்னன் நிற்பான்.

வீரர் சிலர் தம் உடம்பில் அம்புகள் பட்டு நிலத் தைத் தீண்டாமற் கிடப்பர். போரிற் பட்ட வீரரை அவர்கள் மனேவியர் வந்து கண்டு தழுவுவர். அவர் களுட் சிலர் தம் கணவர்கள் விழுப்புண்ணுேடு இறந்ததைக் கண்டு ஆனந்தக் கண்ணிர் சொரிவர். தம் வேந்தன் போரில் இறந்து படின், வீரர் தம் உயிரையும் போக்கிக் கொள்வர். இச்செயல்கள் யாவும் தும்பைத் திணையுள் அடங்கும்.

6ajᎢ 6üᎠᏑᏜ ;

பகையரசரை வெற்றிகொண்ட மன்னன் வாகை மாலையைச் சூடுவான். அவனுடைய அரண்மனையில் வெற்றி முரசு முழங்கும். சேனையாகிய வரம்பை யுடைய போர்க்களமென்னும் வயலுள், கோப மாகிய வித்தை யூன்றி, வேலாகிய கோலையும், யானை யாகிய எருதையும் உடையவனுகிப் புகழை விளே விக்கும் உழவனுக, அரசன் சிறப்பிக்கப்படுவான். போரை வென்ற அரசன் கள வேள்வி செய்வான். "உன்னுடைய புகழையும் பெருமையையும் எண் னிச் செருக்குற்றுப் பிறரை எள்ளி நகையாடுதலே நீக்குவாயாக’ என்று அறிவுடையோர் அரசனுக்குக் கூறுவர். அரசனுடைய குடையைப் பலர் பலவாறு: சிறப்பிப்பர். 'தன் பகைஞர்களை அடக்கி உலகில் அமைதியை நிலை நிறுத்தினமையால் இவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/32&oldid=595563" இலிருந்து மீள்விக்கப்பட்டது