பக்கம்:பாரும் போரும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

ஜெர்மானியரின் கொடுஞ் செயல்களைக் கண்ட ஐரோப்பியர், அவர்களை ஜெர்மன் ஹ9ணர்கள். என்று இகழ்ந்து கூறியது குறிப்பிடத்தக்கது.

இராசபுத்திரர் :

வட இந்தியாவிலுள்ள இராசபுதனத்தில் வாழும் இராசபுத்திரர்கள், பாலைநில மக்களின் பண்பு களான முரட்டுத்தனம், அஞ்சாமை, உடற்கட்டு, சுயேச்சை விருப்பம் முதலிய யாவும் வாய்க்கப் பெற்றவர்கள். இந்தியாவில் நுழைந்த வெள்ளே ஹ9ணர்களின் குருதிக் கலப்பு இவர்கள்பால் உண்டு. இவர்கள் போர் உணர்வுக்கு இதுவும் ஒரு காரணம் என்று வரலாற்ருசிரியர் கூறுவர். ஆப்கானியர் :

பன்னிரண்டாம் நூற்ருண்டில் ஆப்கானியர் என்ற கூட்டத்தார் தலையெடுத்துக் கொலை, கொள்ளை முதலியவற்றை அஞ்சாமல் செய்தனர். பதினேழு முறை இந்தியாவின் மேல் படையெடுத்து இந்திய நாட்டின் செல்வத்தை வாரிச் சென்ற கஜினியும், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி தோன்று வதற்குக் காரணமாயிருந்த கோரியும் இவ்வினத் தவரே.

இன்னும் தாத்தாரியர் (Tartars), காத்துகள் (Goths), செல்ஜக் துருக்கியர் (Turks), ச்தியர் (Sythians) முதலியோர் வீரமும் போர்வெறியும் கொண்ட மக்களாக ,ாங்கினர். ஆ ைல், இவர்கள் யாவரும் பேரரசை நிறுவி ஆட்சி செய்ய 69ుడిు.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/56&oldid=595611" இலிருந்து மீள்விக்கப்பட்டது