பக்கம்:பாரும் போரும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 அவ்வாறு செய்யவில்லை. நாகரிகத்தை நாடோடி வாழ்வோடு இணைக்கவேண்டும் என்பது, அவ னுடைய குறிக்கோள். ஆனல் அது நிறைவேற வில்லை; நிறைவேறவும் முடியாது. செங்கிசுகான் கொடியவன்! கல்நெஞ்சன் ! படு கொலையாளன்! கலையையும் நாகரிகத்தையும் அழிக்க வந்த காலன்! மக்களுயிரை அஞ்சாது குடித்த இரத்த வெறியன் ! ஆனல் தன் வெற்றிச் சிறப்பால் எல்லாருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்ட மாவீரன்! நெப்போலியன் : அலெக்சாந்தரும் சீசரும் நல்ல வாய்ப்பும் வசதி யும் முதலிலேயே அமையப் பெற்றுப்பெருமையும் புக ழும் பெற்றவர்கள். ஆனல் நெப்போலியன் மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து, படிப்படியாக உயர் நிலைக்கு வந்து இறுதியில் ஐரோப்பாக் கண்டம் முழுவதையும் கட்டியாண்ட பேரரசனுக விளங்கின்ை. அலெக் சாந்தர் போர்க்கலையை நன்கறிந்த படைத்தலைவன். சீசர், போர்வன்மையும் அரசியல் அறிவும், பேச்சு வன்மையும், நுண்ணறிவும் மிக்கவன். செங்கிசுக் கான் போராற்றலிலும் அரசியல் அமைப்பு முறையி லும் வல்லுநன். ஆல்ை அவனுக்கும் கல்விக்கும் நெடுந்துாரம். எழுத்து என்று ஒன்று இருப்பதாக நெடுங்காலம் அவனுக்குத் தெரியாது. ஆனல் நெப்போலியன், இவர்களுடைய பண்புகளெல்லாம் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்ததோடு, சிறந்த கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/76&oldid=820535" இலிருந்து மீள்விக்கப்பட்டது