பக்கம்:பாரும் போரும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வயதில் இறந்தான். அவனுடைய பிணம் அத்தீவி லேயே புதைக்கப்பட்டது. இருபது ஆண்டுகட்குப் பிறகு, அவ்வீரவுடல் பிரெஞ்சு நாட்டிற்குக் கொண ரப்பட்டு, ஒருபேரரசனுக்குரிய சிறப்போடு அடக்கம் செய்யப்பட்டது. நெப்போலியனைப் போல் பெரு முயற்சியும், பேருழைப்பும், வியத்தகு அறிவாற்றலும் வாய்க்கப் பெற்ற மனிதனே உலகில் காண்பதரிது. ஒரு நாளைக்கு இரண்டுமணி நேரம் தான் அவன் உறங்குவது வழக்கம். அவன் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, "என்னுடைய மூளையில் பல வேலை முறைகள் ஒழுங்காகவும், தனித்தனியாகவும், அறைகளைப் போன்று அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வேலையை மறந்து மற்ருெரு வேலையைப் பற்றி எண்ணும் போது முந்திய அறைகளே மூடிக் கொண்டு, பிந்திய அறையைத் திறந்து கொள் வேன். இரண்டு வேலைகள் ஒன்ருேடொன்று கலப் பதில்லை. எனக்குக் களைப்பே ஏற்படுவதில்லை. வீண் எண்ணத்திற்கு என் மூளையில் இடங்கிடையாது. உறங்க விரும்பினுல் எல்லா அறைகளையும் மூடி விட்டு, உடனே அயர்ந்து தூங்கிவிடுவேன். நினைத்தபொழுது உறங்குவதற்கு என் மூளையைப் பழக்கி வைத்திருக்கிறேன்" என்று கூறினன். தனக்கு இன்ன செய்தாரையும் மன்னிக்கும் அரும்பண்பினை நெப்போலியன் பெற்றிருந்தான். தன்னைக் கொல்லச் சதி செய்தவரையும் மன்னித் தான். ஆனல் கொடியோரைக் கடுமையாக ஒறுத் தான் ; ஓர் இளம் பெண்ணைக் கட்டாய மணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/85&oldid=820544" இலிருந்து மீள்விக்கப்பட்டது