பக்கம்:பாரும் போரும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஆட்சியையே பெரிதும் விரும்பும் இயல்பினர். முதல் உலகப் போரால், பிரான்சு, பெல்ஜியம் முதலிய நாடுகளுக்குப் பெரும் அழிவு ஏற்பட்டதே தவிர, ஜெர்மன் நாட்டிற்குச் சிறிதும் அழிவு ஏற்படவில்லை. ஆல்ை ஜெர்மானியப் பேரரசின் குடியேற்ற நாடு களும், நிலக்கரிச் சுரங்கங்களும் நேச நாட்டினரால் பறித்துக் கொள்ளப்பட்டன. பெரிய பொரு ளாதார நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்ட மும் ஜெர்மனியை ஆட்கொண்டன. இந்நிலையில் மக்களாட்சியால் ஜெர்மனியில் உருப்படியான முன் னேற்றம் எதுவும் செய்ய இயலவில்லை. பசியாலும், பட்டினியாலும், நோயாலும், வேலையில்லாத் திண் டாட்டத்தாலும் வாடிய அம் மக்கள், தங்கள் குறை நீங்க எத்தகைய மாறுதலையும் மேற்கொள்ளும் நிலையிலிருந்தனர். இச்சமயத்தில்தான் ஜெர்மானிய அரசியல் அரங்கில் உலகமே அஞ்சத்தக்க ஒரு போர்வெறியன் தோன்றின்ை. அவன்தான் அடால்ப் ஹிட்லர். - ஹிட்லர் பிரெளன என்ற ஆஸ்திரிய நகரில் பிறந்தவன். இளமையிலேயே தந்தையை இழந்த் அவனுக்குக் கல்வி கற்கப் போதிய வாய்ப்பில்லை. ஒரு சிறந்த ஒவியணுக வேண்டுமென்பது அவன் ஆசை. ஆல்ை அது ஈடேறவில்லை. அவன் தன் பசிப்பிணியைப் போக்கிக்கொள்ள வியன்ன நகரில் ஒரு கட்டடக் கூலியாக வாழ்க்கை நடத்தின்ை ; முதல் உலகப்போர் துவங்கியதும், ஒரு போர் வீரனுகப் படையில் சேர்ந்தான். போரில் அவன் காட்டிய வீரத்தை மெச்சி, ஜெர்மானிய அரசாங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/99&oldid=820558" இலிருந்து மீள்விக்கப்பட்டது