பக்கம்:பாலும் பாவையும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கேட்டான் கனகலிங்கம். "நீங்கள் யார் என்ன வேலை செய்கிறீர்கள், எங்கே இருக்கிறீர்கள் என்றெல்லாம் விசாரித்திருந்தால் இந்தக் கஷ்டம் இப்பொழுது நேர்ந்திருக்காது. நான்பாட்டுக்கு நீங்களே உங்கள் கடைக்கு முதலாளியாக்கும் என்று நினைத்துக்கொண்டு விட்டேன்...” 'அதனால், என்ன, இப்பொழுது?-நடந்து போன காரியத்தைப்பற்றி வருந்துவானேன்?” "அந்தக் காரியம் என்னால் நடந்திருக்கும்போது, நான் எப்படி வருந்தாமலிருக்க முடியும்?” “உன்னாலா!-அது எப்படி?” என்று கனக லிங்கம் வியப்புடன் கேட்டான். "அவர் என் சித்தப்பா!' என்றாள் அகல்யா. 'எவர்..?” “உங்கள் முதலாளிதான்!” {{ • לל உண்மையாகவா? "ஆமாம்.” கனகலிங்கம் ஒருகணம் மெளனமாக இருந்தான். மறுகணம், "அப்படியே இருந்தாலும் அவர் என்னைக் கூப்பிட்டு விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டிருக்கலாமே?” என்றான். 'இம்மாதிரி சமயங்களில் அதற்கு வேண்டிய பொறுமையை அவரைப் போன்ற நிலையில் உள்ளவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா, என்ன?” என்றாள் அகல்யா. 'உண்மைதான்; அப்படியே கூப்பிட்டு விசாரித்திருந்தாலும் அவரிடம் நான் எப்படி உண்மையை நிரூபித்திருக்கப் போகிறேன்? நான் உண்மையை நிரூபித்திருந்தாலும் அவர்தான் எப்படி அதை ஒப்புக்கொண்டிருக்கப் போகிறார்?' என்றான் கனகலிங்கம்.