பக்கம்:பாலும் பாவையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 “இதில் என்ன அதிசயம் இருக்கிறது?-பெண்கள் அறியாமையிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றுதான் சொல்கிறார்களே தவிர, கற்பிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்று சொல்லவில்லையே!” “அதற்கு இந்திரனைப் போன்றவர்கள் குறுக்கே நிற்கிறார்களே, அவர்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஆண்கள் தங்ளுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ளாத வரை பெண்கள் தங்களுடைய கற்பை எப்படிக் காப்பாற்றிக் கொள்ள முடியும்?” "ஏன் முடியாது?-பெண்கள் தங்களுடைய கற்பைக் காப்பாற்றிக் கொண்டால் ஆண்கள் தாங்களாகவே கற்பைக் காப்பாற்றிக் கொண்டு விடுகிறார்கள்' - “அதேமாதிரி பெனகளும் சொல்லலாமல்லவா?”

“பேஷாய்ச் சொல்லலாம்.' "அப்படியானால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வேண்டாமா?” “அதைப்பற்றி உன் போன்ற பெண்களும் இந்திரன் போன்ற ஆண்களும்தான் சிந்திக்க வேண்டும்.” “சிந்திக்கச் சிந்திக்க ஒரு பலனையும் காணோமே" மூளைதான் குழம்புகிறது !” “உங்களுடைய மூளை மட்டுமா குழம்புகிறது?-உங்களை எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் கலாசாலைக்குப் படிக்க அனுப்பி வைக்கிறார்களே, உங்களுடைய பெற்றோர்கள்அவர்களுடைய மூளை கூடத்தான் குழம்பித் தொலைகிறது" அகல்யாவுக்கு இது பிடிக்கவில்லை; அவள் அவனை எரித்து விடுபவள்போல் பார்ததாள் “என் மீது கோபப்பட்டுப் பலனில்லை; நான் உள்ளதைத்தான் சொல்கிறேன்' என்றான் அவன் "நீங்கள ஒன்றும் உள்ளதையும் சொல்ல வேண்டாம, இல்லாததையும் சொல்ல வேண்டாம் ”