பக்கம்:பாலும் பாவையும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 நீங்கள் என்னைக் கலியாணம் செய்துகொண்டுவிடுங்கள்; நான் சாரதாமணி அம்மையாரைப் போலச்சும்மா இருக்கிறேன் !” "அப்பொழுது மட்டும் அந்த நாலு பேர் சும்மா இருந்து விடுவார்களா?” "இருப்பார்கள்-கல்யாணத்துக்குப் பிறகு யார் எக்கேடு கெட்டுப் போனாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை, அவர்களுடைய லட்சியமெல்லாம் கல்யாணம், கல்யாணம், கல்யாணம்!” என்றாள் ஆத்திரத்துடன் "உன்னுடைய லட்சியம் காதல், காதல், காதல்' என்றான் அவன் பதிலுக்கு. அகல்யா பொறுமையிழந்து, “நீங்கள் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கப்போகிறீர்களா? அன்று சொன்னதுபோல் என்னைக் காதலிக்காமல் கொல்வதைவிடக் காதலித்தே கொன்றுவிடலாம் என்பதுதான் உங்களுடைய எண்ணமா? சொல்லுங்கள்; சொல்லிவிடுங்கள்' என்றாள் அழுதுகொண்டே கனகலிங்கம் சிரித்துக்கொண்டே, “சரி; நான் இப்பொழுது உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்-உன்னுடைய காதல் பிழைக்க வேண்டுமா? அல்லது, நீ பிழைக்க வேண்டுமா?” என்று கேட்டான். “இது என்ன கேள்வி. நானும்தான் பிழைக்க வேணடும்; என்னுடைய காதலும்தான் பிழைத்துத் தொலையவேண்டும் ” "அது எப்படி முடியும்? - காதல் கவிதைகளும் காவியங்களும் ஓலமிடுகிறபடி நீ பிழைக்க வேண்டுமானால் உன்னுடைய காதல் செத்துத்தான் தீரவேணடும், உன்னுடைய காதல் பிழைக்க வேண்டுமானால் நீ செத்துத்தான் தீரவேணடும இதைத் தவிர, நீ இப்பொழுதுள்ள நிலையில் வேறு வழியே கிடையாது' இந்தச் சமயத்தில், "அட பாவி இது என்னடா இது பொழுது விடிந்ததும் விடியாததுமா யிருக்கும பொழுதே